'>

Thursday, January 26, 2012

உங்க லைஃப் பத்திக்கிச்சா? ஊத்திக்கிச்சா? -திரும்பிப்பாருங்க


அண்ணே வணக்கம்ணே !
நமக்குள்ள ஆயிரம் திறமை இருந்தாலும் (இருக்குன்னு நாம நினைச்சாலும்) நம்ம சைட்டை நீங்க தேடி நாடி வர சோசியம் தேன் முக்கிய காரணம்னு நமக்கும் தெரியும். நம்ம நீண்ட ஞாபகத்துலருந்து தேடி சோசியத்துல ஒரு மேட்டரை பிடிச்சு கொஞ்சம் கில்மா ,நக்கல் ,நையாண்டி சேர்த்து உங்களையெல்லாம் ஒரு 48 நாளைக்கு கவர் பண்றது பெரிய மேட்டரே கடியாது.

ஆனால் பை மிஸ்டேக் நமக்கு ஒரு சின்ன விஷயம் தெரிஞ்சு போச்சு.அது இன்னான்னா வெற்றிக்கு திட்டமிடறவன் ஜெயிச்சாலும் தோத்துர்ரான்.

தன் லட்சிய வெற்றிக்கு திட்டமிடாதவன் தோத்தாலும் ஜெயிச்சுர்ரான். நம்ம லட்சியம் ரெம்ப சிம்பிள். சனம் கொஞ்சம் பெட்டரா ரோசிக்கனும் -கொஞ்சம் பெட்டரா செயல்படனும். இதுக்கு வாழ்வின் நிலையாமைய உணரனும்.

இந்த நிலையாமைய டீ ஸ்பூன் அளவுலயாச்சும் உபதேசிக்கிறது சோதிடம். வாழ்க்கையே ஒரு சூதாட்டம் . இதிலான வெற்றி தோல்விகளுக்கு லாஜிக்கே இருக்காது.

ஜெயிக்கிறச்ச குரூபி தன்னை சுந்தரன்னு நினைச்சுக்கறான். முட்டாள் தன்னை ஞானின்னு நினைச்சுக்கறான். இதெல்லாம் லைஃப்ல சகஜமப்பா..

ஆனால் தோத்துப்போகும் போது சுந்தரன் தன்னை குரூபின்னு நினைச்சுக்கறதும் -ஞானி தன்னை முட்டாள்னு நினைச்சுக்கறதும் தான் சோகம்.

இல்லாம போன பிற்காடு அந்த இல்லாமைக்கு அஜீஸ் ஆவறது மானங்கெட்டத்தனம். இருந்தும் இல்லாம இருக்கிறதுதான் சுயமரியாதை.

சிந்தனை -பேச்சு -செயல். இதுல எது உத்தமமானதுன்னு ஒரு கேள்வி வருது. க்லைஞரோட பேச்சையும் -சிந்தனையையும் ஆராச்சும் குறை சொல்லமுடியுமா? ஆனால் செயல்?

"லட்சத்து ஆயிரத்து எட்டு பண்டித சிந்தனைகள், பத்து லட்சத்து பதினெட்டாயிரத்து பத்தினி பேச்சுகளை விட" ஒரு முட்டாள் தனமான பரத்தை தனமான உதவாத வேலைய பக்காவா செய்து முடிக்கறதுதான் கிரேட்டு.

பதிவு எழுதறது வெறும் பேச்சு. ஆனால் இத்தீனி கால வெறும் பேச்சை - பக்காவா எடிட் பண்ணி -அப்டேட் செய்து -ப்ரூஃப் பார்த்து -திருத்தி - பக்கங்கள்ள உட்கார்த்தி வச்சு 160 பக்கத்துல ஒரு புஸ்தவமா கொண்டுவர்ரது வேலை.

வேலைன்னா நமக்கு ரெம்ப பிடிக்கும். இப்பம் நேரம் 2.30 . இதை நள்ளிரவுங்கறதா -அதிகாலைங்கறதா சின்னதா குழப்பம்.ஆனாலும் சலிக்கலை. வலிக்கலை. பெண்டிங்ல இருக்கிற ஜாதகங்களுக்கு பலன் பதிவு பண்ணலாம். ஜோதிடம் 360 யை செதுக்கலாம்.

ஆனால் மூளை இப்படி இரைச்சலா வேலை செய்யும் போது அந்த வேலைகளை செய்தா சரிவராது. அதுலயும் இந்த ஜோதிடம் 360 ங்கறது பெரிய விசப்பரீட்சை ஆயிருச்சு. கடேசியில ஆத்தா நீ விட்ட வழிங்கற லெவலுக்கு வந்துட்டம்.

காசு பணம்னா ஆரோ ஒருத்தரை பிக் அப் பண்ணி இன்டென்ட் பண்ணலாம்.கடன் வாங்கலாம் .கை மாத்து வாங்கலாம். வைக்கலாம்.விக்கலாம்.ஆனால் மேட்டரு?

அதை ரெடி பண்ணனும்னா கம்ப்யூட்டர்,நெட் கனெக்சன்,முருகேசன் மட்டும் போறாது. இன்னம் என்னமோ தேவைப்படுது. சுதந்திரம் ..ஒரு விந்தையான உணர்வு. நம்மை அவளோட அடிமைன்னு நினைச்சு செயல்படறச்ச ரெம்ப சுதந்திரமா இருக்கோம். அந்த நினைப்பும் -செயலும் வரனும்னுதேன் இந்த மொக்கைல்லாம்.

ஆனால் எங்களுக்கு அந்த இழவெல்லாம் கடியாது நாங்க ரெம்ப ஃப்ரீன்னு பீத்திக்கிறவன் நாலணா தேவடியாளுக்கோ - கு.ப கிழடு தட்டிப்போன பொஞ்சாதிக்கோ அடிமையாத்தான் வாழறான்.

ஜாதக பலன் ..அது வேற கேட்டகிரி. அதுக்குன்னு ஒரு மன நிலை -அதுக்குன்னு ஒரு முகூர்த்தம். அதுவா அமைஞ்சா கிடைக்கிற ரிசல்ட்டே தனி .

அது எதுவும் அமையாததால இப்படி மொக்கை போட்டுக்கிட்டிருக்கேன்.அடிமையா இருக்கிறதுன்னா குப்புற படுத்து சாஷ்டாங்க நமஸ்காரம் பண்றதில்லை.

அண்டை வெளியின் பொழிவுகளுக்கும் தாக்குதல்களுக்கும் நெஞ்சை காட்டி இடியோ மின்னலோ ..எரிக்கற்களின் பொழிவோ எதுக்கும் தயார்னு மொட்டை மாடியில திறந்த வெளியில படுத்துக்கிடக்கிறதுதேன். வெயிட் பண்றதுதேன்



No comments: