Sunday, November 27, 2011
சோ ராமசாமி (எ) கோயபல்ஸ்
சர்.ஐசக் நியூட்டனோட லேபுக்கு சின்னதா ஒரு பூனை -பெருசா ஒரு பூனை வந்து போகுமாம். அதுக உள்ளாற இருக்கிறச்ச லேபை பூட்டிட்டு போயிட்டா லேப் நாறிருமே.அதனால நியூட்டன் லேப் சுவற்றில் சின்னதும் பெருசுமா ரெண்டு ஓட்டைய போட்டு வச்சாராம். ( பெரிய ஓட்டை வழியிலயே சின்ன+பெரிய பூனைகள் போயிருமேன்னு ரோச்சிக்கலை அவரு) அறிவு சாஸ்தியாயிட்டா இப்படில்லாம் நடக்கும் போல. இதை எதுக்கு இங்கன சொல்ல வந்தேன்னா மனசு/அறிவு வேற ஒரு பெரிய சமாசாரத்தை வட்டமிட்டுக்கிட்டு இருக்கிறச்ச சின்ன விஷயங்கள்ள எல்லாம் கோட்டை விட்டுரும்னு சொல்லத்தேன். நியூட்டன் போன்றவுகளுக்கு இந்த விதி ஓகே.
துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி போன்ற பார்ட்டிகளுக்கு இந்த விதி பொருந்துமா? ஊஹூம். பருந்து ரெம்ப உசரத்துல பறந்துக்கிட்டு இருக்குமாம். பருந்து பாதி ராத்திரி வரை டிவி பார்க்கிறதில்லையா? கம்ப்யூட்டர்ல வேலை செய்யறதில்லையா அதனால அதுக்கு கிட்ட பார்வை தூரப்பார்வை பிரச்சினையெல்லாம் கடியாதாம்.
எவ்ளோ ஒசரத்துல பறந்துக்கிட்டிருந்தாலும் எங்கனா சாக்கடை ஓரமா ஒரு எலி -அதுவும் செத்த எலி இருந்தாலும் பருந்தோட கண்ல படக்குன்னு பட்டுருமாம். உடனே விஷ்க்னு வந்து கொத்திக்கிட்டு போயிரும்.மனசும் புத்தியும் கேவலமான விஷயங்களை வட்டமிட்டுக்கிட்டு இருக்கும்போது சாதாரணமான - யதார்த்தமான விஷயங்கள் கூட புத்திக்கு உறைக்காது. உறைக்காது போனாலும் பரவால்லை கேவலமா தெரியும். கேவலமா தெரிஞ்சாலும் பரவால்லை. கேலியா தெரியும்.
ஞாயிற்றுக்கிழமையா.. மழை வேற நச்சு நச்சுனு ஊத்திக்கிட்டே இருந்துதா ஊட்ல பொஞ்சாதி பொண்ணுல்லாம் ஏதோ கண்ணாலத்துக்கு போனாய்ங்களா.. டிவின்னாலே கடுப்பா , மத்த பத்திரிக்கைகளை எல்லாம் பார்த்து முடிச்சாச்சா என்னமோ புத்தி கெட்டுப்போயி துக்ளக்கை வாங்கி தொலைச்சுட்டன்.
காசு கொடுத்து வாங்கினதாலயே உபயோகிச்சுரனுங்கற மிடில் க்ளாஸ் மென்டாலிட்டி விடுமா.. படிச்சுட்டன்.
பஸ் கட்டண உயர்வுக்கு ஜே ,பால் விலை உயர்வுக்கு ஜே, மின் கட்டண உயர்வுக்கு ஜே , கூடங்குளம் அணு உலைக்கு ஜே. மிஸ்டர் சோ ! ஒங்களுக்கே அச்சாணியமா படலையா இதெல்லாம்? துக்ளக் என்ன ஏர் போர்ட்ல மட்டுமா விக்குது? கொய்யால பஸ் ஸ்டாண்ட் ,பஸ் ஸ்டாப்ல தானே அதிகமா விக்குது. அங்கன வரவனெல்லாம் என்ன டாட்டா,பிர்லா,அம்பானி ,வாடியாவா?
துக்ளக்கை படிக்கிறவன்ல பாதி உங்களாவான்னே வச்சுக்குவம். விலை உயர்வால பாவம் அவாளுக்கும் பாதிப்பு உண்டுதானே. ( துக்ளக்கை படிக்கிறவன்ல மீதி எங்காளுங்கதேன். மெத்தபடிச்சவுகதேன். என்ன ஒரு இமிசைன்னா தாளி அவிகளுக்கு சரித்திரம் தெரியாது.
கட்சிக்காரவுக போடற துண்டு பிரசுரம் கூட பெட்டரா இருக்குமோ என்னமோ.. பக்கத்துக்கு பக்கம் ஜல் ஜக் ( ஒரே விதி விலக்கு நூலகத்தை மாத்தறதை பத்தி ரோச்சிக்கனும்னும் - நில மதிப்பீடுக்கான புது கைட்லைன்ஸை குறை சொல்லியும் எளுதியிருக்கு)
அவாள் இவாள்னு வித்யாசம்லாம் இல்லே.மன்சனோட பிறவிகுணமே என்னடான்னா அவனோட மனசு அப்பன் உசுரோட இருக்கிறச்ச தாளி செத்து தொலையமாட்டானான்னு மனசு நினைக்கும். அம்மா இருக்கிற வரை கிளவி இம்சியை தாங்க முடியலடாங்கும். அவிக செத்துதொலைஞ்ச பிற்பாடு "அந்த நாள் ஞாபகம்"னு ஏங்கும்.
எஸ்பெஷலி இந்த " நூல்" பரம்பரையோட சைக்காகலஜி என்னடான்னா ப்ரெட் ஹன்டிங் -ஜாப் ஹன்டிங் -கேரியர்ல சர்வைவ் ப்ராப்ளம் இத்யாதில்லாம் இருக்கும்போது பெரியாரை விட ஃபாஸ்டா வேதமா வெங்காயமாம்பான்.
ஓரளவு செட்டில் ஆயிட்டா கில்ட்டி வந்துரும். நாம அதையெல்லாம் (வேதம் -புராணம் -இத்யாதி) நெக்லெக்ட் பண்ணிட்டமோ -தெரிஞ்சுக்கிட்டு இருக்கனுமோன்னு மனசு அலைமோதும். அப்படி சோ ராமசாமி அவர்களோட குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடுதேன் எங்கே பிராமணன் இத்யாதி எல்லாம்.
துடைப்பம் புதுசா இருக்கும்போது கேல்குலேட்டரை விட வேகமா நெல்லா பெருக்கும் -துளி சத்தம் வராது. போக போக சத்தம் பெருகும். பெருக்கறது குறைஞ்சுரும்.அப்படித்தான் சோவோட நிலைமையும்.
இவரு பா.ஜ.கவை பப்ளிக்கா சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சதுலருந்தே முட்டாக்கூ வெல்லாம் அலார்ட் ஆயிட்டாய்ங்க. அட திமுக ஆயி.கலைஞரு கலீஜு . நீ ஜெவை தூக்கி புடிச்சே.புடிச்சுக்கோ. அந்தம்மாவோட வெற்றிக்கு .புரோக்கர் வேலைல்லாம் பண்ணதா அலட்டிக்கிட்டே அலட்டிக்கோ.
ஒரு பத்திரிக்கைக்கு வாசகன் முக்கியம். அவனோட உணர்வுகள் முக்கியம். அதைக்கூட கண்டுக்காம மார்கழி பஜனை கணக்கா சகட்டுமேனிக்கு ஜல்ஜக் .தூத்தேறிக்க..
சித்திராபவுர்ணமியை அரசு விழாவா ஆக்கிட்டாய்ங்களாமே அதுக்கும் ஒரு பாராட்டு. .. இதுல திராவிட நாட்டை கை விட்ட பழங்கதையை வச்சு ஆன்டி திராவிடன் பிரச்சாரம். ( ஆனால் புரோக்கர் வேலை பார்த்த அதிமுகவும் திராவிடன் மூவ்மென்டுதானே -ஓஹோ ..அது தொழில் தர்மம் போல --இன்னாது இனப்பாசமா..)
சோ வெல்லாம் நம்ம ஓம்கார் ஸ்வாமிகள் சொல்ற வேதகால வாழ்வு பள்ளியின் ட்ராப் அவுட்டுங்க.ஓப்பன் யூனிவர்சிட்டில கதை பண்ணிட்டு கதை விட்டுக்கிட்டிருக்காய்ங்க.
எத்தனை பேரு எத்தீனி வாட்டி துப்பினாலும் தி..ருந்த...மாட்டேங்கறாய்ங்களே..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment