'>

Sunday, October 9, 2011

ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையே


ஜோதிடம் ஒரு விஞ்ஞானமேன்னு நிரூபிக்கிற அளவுக்கு நம்ம கிட்டே வாதங்கள் ஆயிரக்கணக்குல இருந்தாலும் அதை எடுத்து வைக்க ஒரு முகாந்திரம் வேணமே வெறுப்பு இல்லாம கொஞ்சம் பொறுப்பா வேற ஆராச்சும் ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேனுட்டு வாதங்களை எடுத்துவச்சா நல்லாருக்கும். அதை ஒரு முகாந்திரமா வச்சுக்கிட்டு நம்ம சரக்கையெல்லாம் அவுத்து விடலாம்னு கனவு கண்டேன். ஊஹூம்

கனமான வில்லன் ரோலை செய்ய பொருத்தமான வில்லன் நடிகர் கிடைக்காதப்போ ஹீரோவே டபுள் ரோல் பண்ற வழக்கத்தை துவக்கி வச்சது நம்ம தலைவருதேன். (ஹி ஹி எங்க ஊரு தேவுடு என்.டி.ஆரை சொன்னேன்)

நம்ம வாதங்களை முழுக்க கேட்டுட்டு குருவுக்கேத்த சிஷ்யனா குருவை மிஞ்சின சிஷ்யனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க

இப்படி வாதங்களை எடுத்து வைக்கறதே இதே வாதங்களை வேற ஆராச்சும் எடுத்துவச்சா யங் மாஸ்டர் சினிமாவுல ஜாக்கிசான் வாதாம் கொட்டைகளை நொறுக்கின கணக்கா நம்மாளுங்க நொறுக்கனும். அதுக்கான பயிற்சிதான் இந்த பதிவு.

பால் வீதியில கச்சாமுச்சான்னு கிரகங்கள் இருக்கு (பால் வீதிகளே அனேகம் இருக்கிறதாவும் சொல்றாய்ங்க.) இதுல இந்த விஸ்வமே ஒரு பக்கம் சுருங்கிக்கிட்டும் - இன்னொரு பக்கம் விரிவடைஞ்சுக்கிட்டு இருக்காம் வீல் சேர்ல இருந்தே ஒருத்தரு கண்டுபிடிச்சு சொன்னாரு.

ஆனால் சோசியத்துல 7+2 கிரகங்கள் தான் செலாவணியில இருக்கு. சுருக்கம் விரிவாக்கம் இதுக்கெல்லாம் இடமே இல்லை. இது என்னய்யா தர்கம்? ஜோதிடம் எப்படிய்யா விஞ்ஞானமாகும்?


இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது. ஆனால் ரஜினி காந்த் ஒருத்தருதேன் சூப்பற ஸ்டார் ஆறாரு. மத்த 479 குழந்தைங்க என்ன ஆச்சு?


பெண்கள் வயதுக்கு வந்த நேரத்தை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதை ருதுஜாதகம்ங்கறாய்ங்க. ஒருபெண் மோசமான ஜாதகத்துல பிறந்து யோகமான நேரத்துல வயசுக்கு வந்துட்டா என்னாகும்? அட ஒரு பொண்ணு யோகமான ஜாதகத்துல பிறந்து மோசமான ஜாதகத்துல வயசுக்கு வந்துட்டா என்னாகும்?

ருதுஜாதகம் பவர்ஃபுல்லா? ஜனன ஜாதகம் பவர்ஃபுல்லா? ஏதோ ஒன்னுதான் பவர்ஃபுல்லுன்னா அடுத்தது டம்மியா? ( ஐ மீன் பொய்யா போகுமா?) அட ரெண்டுமே பவர்ஃபுல்லுன்னா சிண்டை பிச்சுக்கனுமா? இன்னாய்யா லாஜிக் இது?

பெண்கள் மேட்டர்லயே இன்னொரு சப்ஜெக்டு. மாங்கல்ய பலம்/தோஷம். கொய்யால நேத்துவரை அவன் யாரோ இந்த பெண் யாரோ ஆனால் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதுமே இவ ஜாதகத்துல உள்ள மாங்கல்ய தோஷம் அவனுக்கு டிக்கெட் போட்டுருமா? அப்ப அவன் ஜாதகம் என்ன மானாட மயிலாட பார்க்க போயிருமா?

மாங்கல்ய தோஷம் உள்ள பெண் தீர்காயுள் கொண்ட ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டா இவ ஜாதகப்படி விதவையாவாளா? அ அவன் ஜாதகப்படி இவளோட மாங்கல்ய தோஷம் ஃபணாலாகி சுமங்கலியா இருப்பாளா?

அவள் ஜாதகமும் வேலை செய்யனும்.இவன் ஜாதகமும் வேலை செய்யனும். அப்பத்தேன் ஜோதிடம் உண்மையாகும் . அதெப்படி ரெண்டு ஜாதகமும் வேலை செய்யும்? ரெண்டும் வேலை செய்தா என்ன பலன்?

ஆரூட லக்னம்:
கேள்வி கேட்கப்பட்ட நேரத்தை வச்சு பதில் சொல்ற மெத்தட் ஒன்னிருக்கு. அதான் ஆரூடம்/ஆரூட லக்னம்னு சொல்லப்படுது.

அதாவது கேள்வி கேட்ட நேரத்துல எந்த லக்னம் உதயமாகியிருக்கோ அதுக்கு எத்தனையாவது பாவத்துல என்னென கிரகம் இருக்குன்னு பார்த்து பார்ட்டி வந்த வேலை என்ன? அது ஆகுமா ஆகாதான்னு சொல்றதுதான் ஆரூடம்.

சராசரியா ஒரு லக்னம் ரெண்டுமணி நேரம் இருக்கும். ஒரு பிசியான ஜோசியர் கிட்டே 2 மணி நேரத்துல கு.பட்சம் 20 பேராவது வருவாய்ங்க. அப்போ 20 பேரும் ஒரே வேலையா வந்தாப்லயா? 20 பேருக்கும் ஒரே முடிவு தானா?

சோதிட விதிகள் தொகுக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆயிருச்சு. உலகம், நாடு ,மக்கள்,மக்கள் வாழ்க்கை ,கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் எல்லாமே மாறிப்போச்சு. ஆனால் இன்னைக்கும் அதே அரதப்பழசான விதிகளை வச்சுக்கிட்டு ஜல்லியடிக்கிறாய்ங்களே .. இதுல தர்கம் இருக்கா? நியாயம் இருக்கா?

பாலாரிஷ்ட தோஷம்னு ஒரு விஷ்யம் இருக்கு. குறிப்பிட்ட கிரக நிலையில குழந்தை பிறந்தா அது உயிர் வாழாதுன்னு சொல்றாய்ங்க.ஆனால் அதே கிரக நிலைகளை கொண்ட ஜாதகங்கள் திருமணம், சந்தானம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பா பலன் கேட்டு இன்னைக்கும் வருதே. அவிக ஏன் சாகலை? அப்ப பாலாரிஷ்ட தோஷம்ங்கறது டுபுக்கா?

ராமர் ஜாதகம் , அனுமார் ஜாதகம்னு பார்க்கிறோம். சிலர் தகட்டுலயே கீறி வித்துக்கிட்டிருக்காய்ங்க.
(அவற்றை அனலைஸ் பண்ணி பார்த்தா வா.வெ ) அவிக தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்தது ஆரு? பர்த் சர்ட்டிஃபிகேட் இஷ்யூ பண்ணது ஆரு? அவிக பர்த் டீட்டெயில்ஸை இந்த சோதிடப்புலிகளுக்கு தந்தது யாரு?

நட்சத்திர தோஷங்களை பற்றி சொல்லும் போது ஆண் நட்சத்திரங்களுக்கு தோஷமில்லேன்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. தோஷம் என்ன ப்ரெஸ்ட் கான்சரா பெண்களை மட்டும் எஃபெக்ட் பண்றதுக்கு. இது வடி கட்டின மேல் சாவனிசமில்லையா? இதுல என்னத்தை தர்கம் வாழுது?

அரசியல்ல எல்லா கட்சி காரவுகளும் (சுயேச்சை உட்பட) சோசியம் பார்த்துத்தான் தேர்தல்ல நிக்கிறாய்ங்க. ஆனாலும் ஒரு தொகுதியில ஒரு வேட்பாளர்தான் ஜெயிக்கிறாரு. மத்தவுக தோத்துத்தான் போறாய்ங்க. தோத்தவன் தோக்கறோம்னு தெரிஞ்சே வாரி இறைச்சு தோற்கிறானா? அல்லது வெற்றி உனக்கேன்னு தப்பா சொல்லப்பட்ட பலனை நம்பி நிக்கிறானா?

சினிமா உலகத்துல எல்லா தயாரிப்பாளரும் சோசியம் பார்த்துத்தேன் படம் பண்றாய்ங்க. ஆனால் பலதும் பப்படமாயிருது ஏன்?

குரு பலம் வந்துருச்சு கங்கணம் கூடியிருக்குங்கறாய்ங்க. அல்லது குரு சரியில்லை தம்பதிகளுக்குள்ளே பிரச்சினை வரும்னு சொல்றாய்ங்க அது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு எந்த சோசியரும் சொல்லமாட்டேங்கறாரு. சோசியம் விஞ்ஞானம்னா காரண காரியத்தை விளக்கலாமே.

பரிகாரம்ங்கற பேர்ல சகட்டுமேனிக்கு யாகம் ,தானம் தருமம்லாம் பண்றாய்ங்க. ஆனாலும் பதவி பறிபோகுது. கைதுலருந்து கோர்ட்டுதான் காப்பாத்துது. ஜாதகத்தை வச்சு பலன் - பலனை தவிர்க்க பரிகாரம்.
பரிகாரம் டுபுக்குன்னா பலனும் டுபுக்குத்தானே. பலன் டுபுக்குன்னா ஜாதகம் ஜோதிடம் எல்லாமே டுபுக்குத்தானே?

இந்த மாதிரி தில்லாலங்கடி மேட்டர்லாம் மஸ்தா கீது வாத்யாரே தவுசண்ட் வாலா கணக்கா தீபாவளி தான். தூள் பண்ணுங்க.

No comments: