'>

Wednesday, September 28, 2011

அடிச்சவனே .. ..................க்கிட்டாண்டி..

அண்ணே வணக்கம்ணே!
தலைப்புக்கான மேட்டரை பதிவுல தேடாதிங்க பவர் கட்டுக்கு அப்பாறம் ஆடியோவா தர உத்தேசிச்சிருக்கன். சாரி.

கெடுவான் கேடு நினைப்பான் - வீட்டப்பம் ஓட்டைச்சுடும்ங்கற மேட்டர் மக்களுக்கு பொருந்துதோ இல்லையோ.. மந்திரிகளுக்கு சிக்குன்னு பொருந்துது.

ராஜாவுக்கு மந்திரி பதவி கிடைச்சப்ப மாறன் பொத்திக்கிட்டு கடந்திருந்தா ஸ்பெக்ட்ரம் மேட்டரே வெளிய வந்திருக்காது.

ஆனால் மாறன் ராஜாவுக்கு ஆப்பு வைக்கிறோம்ங்கற ஃபீலிங்ல மறைஞ்சிருக்கிற ஐஸ்கட்டியோட முனைய ச்சூ காட்டி விட இன்னைக்கு இமயமா உயர்ந்து நிக்குது ஊழல்.

சரி மாட்டினது மாட்டிக்கிட்டம் - மத்தவுகனா நல்லாருக்கட்டும்னு ராஜா நினைச்சிருந்தா பரவால்லை. ஆனால் அவரு " கூசே காடிதி மேசே காடிதினி செடிப்பிந்தி" ங்கற மாதிரி கோர்த்து விட்டுட்டாரு.

அட .. இவிக கதைய விடுங்க. பிரணப் - சிதம்பரம் கதைய பாருங்க. மொத்தத்துல நம்ம நாட்டுக்கு செப் 27 அன்று ஆரம்பமான சூரியதசை குரு புக்தி .. இந்த மாதிரி கே.மா, மொ.மாக்களையெல்லாம் ஒழிச்சு கட்டிரும்போல.

இதே பாணியில நேத்து நம்ம ஸ்டேட்ல நடந்த மேட்டரை சூடா கொடுத்திருக்கேன் பாருங்க.


* * *
எங்க ஊரு கைத்தறி மந்திரி ஜகன் ஒய்.எஸ்.ஆரோட அதிகாரத்தை பயன்படுத்தி கச்சாமுச்சான்னு சம்பாதிச்சுட்டதா ஹைகோர்ட் சீஃப் ஜஸ்டிஸுக்கு ஒரு லெட்டர் போட்டாரு.

அதை ஜஸ்டிஸ் சுமோட்டோவா ( தன்னிச்சையா? - ம்னுவாகவா?) ஏத்துக்கிட்டு ஜகன் மேட்டர்ல சி.பி.ஐ விசாரணை தேவையான்னு பார்க்க உத்தரவிட்டாரு. சிபி.ஐ தேவைதான்னு அறிக்கை கொடுத்துருச்சு.

(வேற எப்படி கொடுக்கும் -சி.பி.ஐ ன்னா காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ஆச்சே - ஜகன் என்னவோ இப்பம் சோனியாவை கிழி கிழின்னு கிழிக்கற பார்ட்டி) ஜகன் தொடர்பான வீடுகள் ,அலுவலகங்கள்ள மின்னல் வேகம் -வாயு வேகத்துல ரெய்டெல்லாம் அடிச்சாய்ங்க.

மேற்படி கை. த மந்திரி இஷ்டத்துக்கு வாயை விடற பார்ட்டி. முந்தா நேத்து மந்திரி சபையில ஊழல்வாதிங்க சாஸ்தியாயிட்டாய்ங்க. உள்துறை & கலால் துறையில "மியா மியா" கொடுத்தாதான் போஸ்டிங் போடறாய்ங்க. சில்லரை வெட்டினாத்தான் ட்ரான்ஸ்ஃபருன்னு அடிச்சு விட்டாரு.

மந்திரிகளை பத்தி நீங்களோ நானோ சொன்னா அது பீலாவா கூட இருக்கும். சக மந்திரியே சொன்னா அதை நம்பித்தானே ஆகனும். ஹைகோர்ட் இவரோட இந்த பேச்சையே மனுவா ஏத்துக்கிட்டு ஜகன் மேட்டர்ல போலவே சி.பி.ஐ விசாரணை தேவையான்னு விஜாரிக்க சொல்லி இன்னொரு பெஞ்சுக்கு அனுப்பியிருக்கு.

ஈதிப்படியிருக்க மேற்படி கை.த மந்திரி ஹைதராபாத் கார்ப்பரேஷன் எலக்சன்ல கார்ப்பரேட்டரா போட்டியிட சீட்டு கொடுக்க பத்து லட்சம் கேஷ் வாங்கிக்கினு கீற சீனை ரிசர்வ்ல வச்சிருந்து நேத்து விட்டுட்டாய்ங்க. ( TV5)

இன்னம் ஹைதராபாத் க்ரீன் ஃபீல்ட் நில மோசடி முதலாக மந்திரியாரோட சகல சாதனைகளையும் நாறடிச்சுட்டாய்ங்க.

கடவுள் முள்ளை முள்ளால எடுத்துட்டு ரெண்டு முள்ளையும் வீசிருவாரு போல. பாவம் கை.த மந்திரி.. பாவம் ஜகன்.

ஜகனுக்கு கை.த ம ஆப்பு வைக்க , மந்திரிக்கு ஜகன் ஆப்படிச்சுட்டதா பேசிக்கிறாய்ங்க..


* * *

இந்த பதிவுல இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை ப்ரஸ்தாபிக்க போறேன். கன்டின்யுட்டி எதிர்பார்க்கிற பார்ட்டிகள் மன்னிக்கனும்.

சகட்டு மேனிக்கு தொடர்ந்து செக்ஸ்ல ஈடுபட்டா என்னென்னமோ வியாதிகள்ளாம் வரும்னு காமசாஸ்திரத்துல சொல்லியிருக்கிறதாவும் - ஆனால் நவீன மருத்துவ இயல் இதை கண்டிக்கிறதாவும் ஏதோ ஒரு சைட்ல பார்த்தேன்

இதை பற்றிய என் கருத்தை இன்னொரு நாள் விவரமா சொல்றேன். அதுக்கு மிந்தி உங்க கருத்தையும் அறிய ஆவல்.

No comments: