'>

Wednesday, June 8, 2011

தில்லு துரைகளுக்கு மட்டுமான கேள்விகள்

முன்னுரை:
ஒரு ஜோதிட ஆலோசகனாக சனங்க கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொ(வெ)றுப்பான நிலையில் இருந்த எனக்கு கேள்வி கேட்க  கிடைத்த மொத சான்ஸ் இது. அதனால  என் கேள்விகள் "குட்டெத்து சேன்லோ பட்டட்டு" இருக்கும். ( குருட்டு காளை கழனியில இறங்கின மாதிரி) .

முடிஞ்சா அல்லாத்துக்கு பதில் கொடுங்க. இல்லாட்டி முடிஞ்சதுக்கு இப்ப பதில் கொடுங்க. முடியாததுக்கெல்லாம் முடிஞ்ச போது பதில் கொடுங்க.

1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்?  உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. - க்ரியேட்டர் - திங்கர்    ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி...தன்னு  சொல்லிராதிங்க

2.உங்க குடும்ப பின்னணி - அது இன்றைய உங்களின்  உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?
Read more

No comments: