'>

Friday, May 6, 2011

ஒபாமா இனி உனக்கு ஆப்பும்மா!

உஜிலா தேவி என்னடான்னா இண்டியன் மெடிசினை முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஒழிச்சுக்கட்டிட்டாய்ங்கன்னு பிலாக்கணம் பாடிக்கிட்டிருக்காரு. நாம என்னடான்னா ஒசாமாவுக்கு ஓ போடறோம். 


இன்னா பண்றது நைனா இன்னாதான் அக்வார்டா இருந்தாலும் நெஜம் நெஜம்னு ஒன்னு கீதுல்லியா. அமெரிக்காவை கிழிக்க ஒரு பெரிய கூட்டமே கீது. அமெரிக்காவுக்கு பாரதமாதாவை கூட்டிக்கொடுக்க ஒரு கூட்டமே காத்துக்கினு கீது ( இன்னாது கா -கூ -ட்டிக்கொடுத்தாச்சுங்கறிங்களா? ஓஹோ அணு ஒப்பந்தம் பத்தியா அது சரி) 


ஆனால் பாருங்க இப்ப அமெரிக்க ஆயுத கம்பெனிங்க கமிஷன்லாம் தர்ரதில்லையாம் அதனால நம்ம நாடு பிரான்ஸ் நாட்டு விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்காம். ( அமெரிக்க கம்பெனியோட இருந்த ஒப்பந்தத்தை ரத்து பண்ணி - ஆயிரம் தான் இருந்தாலும் பைசா மே பரமாத்மா கீறாருப்பா.


ஒசாமாவ போட்டு தள்ளிட்டாய்ங்க. அதுவும் பாக்கோட அனுமதி இல்லாம  பாக் டெரிட்டரில  நுழைஞ்சு. பாக் உதவியோட செய்து - பத்தினி வேஷம் போட்டிருந்தாலும் ஓரளவுக்கு டைஜஸ்டபிள். ஆனால் பாக் அரசுக்கு தெரியாதுங்கறாய்ங்களே இது மட்டும் நெஜமா இருந்தா? பகீருங்குதுப்பா.


இதை முன்னுதாரணமா காட்டி சீனாக்காரன்  தலாய்லாமா இந்தியாவுல இருக்கிறப்ப தூக்கிட்டா இன்னாபா பண்றது? "எங்கெங்கு காணினும் சக்தியடா"ங்கறாப்ல உலகத்துல எங்கன பார்த்தாலும் பதவி வெறிதேன் தலைவிரிச்சு ஆடுது.


ஒபாமா விழுந்து கிடக்கிறதை ( இமேஜை சொன்னேங்க) தூக்கி நிறுத்த ஒசாமாவ போட்டு தள்ளிட்டாரு. இது இத்தோட போச்சா? ஆலமரம் சாயறப்பவே என்னென்னவோ நடந்து போச்சு ( ராஜிவ் காந்தி படுகொலைய சொல்றேன்)  இது இன்னா மரம்னு எதிர்காலம் சொல்லும். Read More

No comments: