புட்டபர்த்தி சாயி பாபாவின் உடல் நிலை குறித்து கடந்த சில தினங்களாக வித விதமான சேதிகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிமிடம் "தேறிவருகிறது" அடுத்த நிமிடம் " கவலைக்கிடம்"
இந்நிலையில் அவர் சில ட்ரஸ்ட் உறுப்பினர்களின் சதிவலையில் சிக்கியிருப்பதாக பிரபல தெலுங்கு தினசரி செய்தி வெளியிட்டுள்ளது. ட்ரஸ்ட் மேற்கொண்ட ப்ராஜெக்டுகளில் சில ட்ரஸ்ட் உறுப்பினர்கள் "ஆதாயம்"பார்த்துவிட்டதாக பாபாவின் பார்வைக்கு வந்த நிலையில் இந்த உடல் நிலை பாதிப்பு பல ஐயங்களை எழுப்புகிறது.
கடந்த வாரம் தன்னை சந்தித்த பக்தர் ஒருவரிடம் பாபா தான் சுதந்திரமாக இல்லையென்றும் - கைதியாக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னதாக தகவல்.
முதல் முதலில் பாபா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது ஹெலிகாப்டரில் வந்து சேர்ந்த மருத்துவர் குழுவை ராகு காலத்தை காரணம் காட்டி ஒரு ட்ரஸ் உறுப்பினர் தாமதிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாபாவின் காட் மேன் , ஹோலி மேன் இத்யாதி பில்டப்புகளில் நமக்கு கருத்துவேறுபாடு இருந்தாலும் ஒரு முதியவர் - அதிலும் சதி வலையில் சிக்கியுள்ளார் என்ற நிலையில் ஊதும் சங்கை ஊதி வைப்போம் என்றே இந்த பதிவு.
இந்த நிலையிலும் சில பாகவதோத்தமர்கள் பாபாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதையும் "லீலை" என்று உளறிக்கொட்டுவதை டிவியில் பார்க்க "பித்தம் தலைக்கேறிவிட்டதை" உணர முடிகிறது.
பாபாவின் உறவினர்களோ கடந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களையடுத்து 5 மாதங்களாக பாபா உணவே அருந்தாத நிலையிலும் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் கண்டுகொள்ளாததும் ,பாபா சிகிச்சையை ரகசியமாக வைப்பதிலும் உள் நோக்கமிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
புட்டபர்த்தி கிராம தேவதை சத்தம்மா. சமீபத்தில் இந்த தேவி சிலை மூளியானதை காரணமாக காட்டி ட்ரஸ்ட் உறுப்பினரும் பாபாவின் சகோதரர் மகனுமான ரத்னாகர் அதை புக்கபட்ணம் ஏரியில் போட்டுவிட்டு புது சிலையை ப்ரதிஷ்டை செய்தாராம்.
இதற்கு பிறகுதான் பாபா குடும்ப உறுப்பினர்களுக்கு கேடு காலம் ஆரம்பித்ததாம். பாபா உடல் நிலை கவலைக்கிடம் என்ற செய்தியை கேட்டு பக்தர்கள் புக்கபட்ணம் ஏரியை முற்றுக்கையிட்டு பழைய சத்தம்மா சிலையை வலை வீசி தேடி வருகின்றனராம். நல்லாவே கிளப்பறாய்ங்கப்பா பீதியை.
மத்திய மானில அரசாங்கங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் அதிரடி விசாரணை மேற்கொண்டு பாபா என்ற முதியவரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதே நம் போன்ற பகுத்தறிவாளர்களின் கருத்து

No comments:
Post a Comment