'>

Saturday, March 12, 2011

ராத்திரிகள் வந்துவிட்டால்




நீங்க ஏறக்குறைய என் வயசு ஆசாமியா இருந்தா கமல் ரஜினி சேர்ந்து நடிச்ச இளமை ஊஞ்சலாடுகிறது படம் ஒங்களுக்கு கியாபகம் இருக்கும் ( ரஜினி ஸ்டைலுங்கோ).

சரி சின்னவயசா இருந்தாலும் நள்ளிரவு எஃப்.எம்ல கேட்டிருப்பிங்க. - ஏதோ ஒரு பாடாவதி சானல்ல அதுல அந்த படத்துல வர்ர "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்"ங்கற பாட்டை கேட்டிருப்பிங்க/பார்த்திருப்பிங்க.

கரீட்டா .அதே பாட்டுல "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்"ங்கற வரியை எத்தீனி பேரு கவனிச்சிங்களோ தெரியாது. நான் கவனிச்சிருக்கேன். அந்த வரி தான் இன்னைக்கு லீட்.

அதென்ன ராத்திரிகள் வந்துட்டா சாத்திரங்கள் ஓடிப்போயிருங்கறாய்ங்க. அப்ப சாஸ்திரத்துக்கு ஆஃபா. அல்லது சாஸ்திரம்லாம் ஒரு ஷிப்டுதான் வேலை செய்யனுமா?

பகலுக்கும் ராத்திரிக்கும் என்ன வித்யாசம்?

பகல்ல சூரியனோட வெப்பத்தை கிரகிச்சுக்கிட்ட பூமி அதை மாலை முதல் வெளிவிட ஆரம்பிக்கும். ராத்திரிக்கு குளிர்ந்து போகும் (இதெல்லாம் அந்த காலத்து கணக்குங்கண்ணா. இப்பல்லாம் பால்காரன் ராத்திரி ஞாபகத்துல ஹாரனை அமுக்கிற நேரம்தான் குளிருது. எல்லாம் பொல்யூஷன்.

பகல்ல சூரியனோட ஆட்சி. இவர் ஆத்ம காரகர். சுயம் அ செல்ஃப் என்ற தன்னுணர்வுக்கு காரகர். அறிவு பூர்வமா ரோசிக்க வைப்பாரு.

ஒரு மாசத்துக்கு ஒரே ராசில சஞ்சரிக்க கூடியவர் (ஸ்திரம்) வருஷத்துல ஆடிமாசத்துல கடகத்துலயும், புரட்டாசி மாசத்துல துலாலயும் கொஞ்சம்போல தள்ளாடுவார் . எங்கயாச்சும் ராகு கேது கூட லிங்க் ஆனா, சனியோட லிங்க் ஆனா கொஞ்சம் போல தடுமாறுவார்.

மற்றபடி பர்ஃபெக்ட் ஜென்டில் மேன். இந்த சந்திரன் கீறாரு பாருங்க. லொள்ளு பிடிச்ச ஆசாமி. அரசியல் வாதி மாதிரி ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிப்புடுவாரு. மாசத்துல பாதி நா வளர்ச்சி,பாதி நாளு தளர்ச்சி.

இப்படியா கொத்த பார்ட்டியோட ஆட்சி ராத்திரில நடக்குது. மேலும் இவர் மனோகாரகர். முகம் விகாரமாயிருச்சுன்னா ஒரு வாரம் அட்மிட் ஆகி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கினு வெளிய வந்துரலாம். தாளி மனசு விகாரமாயிருச்சுன்னு வைங்க.. மாசக்கணக்குல கவுன்சிலிங் , அது இதுன்னு மன்னாடனும். Read More

No comments: