இன்னாங்கடா இது நாம வந்தது அனுபவஜோதிடம் டாட் காம் தானா வேற எதுனா இழவான்னு கன்ஃப்யூஸ் ஆயிராதிங்க.ஜாதகத்துல லக்ன ஸ்தானம்,தனஸ்தானம்லாம் கேள்விப்பட்டிருக்கோம் அதென்னா ட்ரிபிள் எக்ஸ் கணக்கா மர்மஸ்தானம்னு கேப்பிக. சொல்றேன். மர்மஸ்தானம்னா நீங்க நினைக்கிற அதே அர்த்தம்தேன். ஆனால் இயற்கைக்கு விரோதமா இச்சையை அடக்கினவன் ,மோக வெறியில உள்ளவன்அதை மர்மஸ்தானம்னு தான் நினைப்பான். "சீ சீ ஆயி"னுட்டு பந்தா பண்ணுவான்.
ஆனால் காலா காலத்துல ஆடி முடிச்சு இறங்கி வந்தவன் அதை ஜன்ம ஸ்தானம்னுட்டு ஒரு கும்பிடு போட்டுட்டு வேறு வேலை பார்க்க போயிருவான். அதுசரி ஜாதகத்துல மர்மஸ்தானம்ங்கறது எது ? லக்னாத் எத்தினியாவது ஊடு அதை சொல்லுப்பானு துடிக்கிறிங்க. சொல்றேன். லக்னாத் எட்டாவது ராசிதான் மர்மஸ்தானம்.
அது ஆயுள் ஸ்தானம்தானேனு கேப்பிக. சொல்றேன். கமல் காந்தியோட 3 குரங்குகள் தீமுக்கு ஃபோஸ் கொடுத்துட்டு நாலாவதா ஒரு ஃபோஸ் கொடுத்திருந்தாரு. அதாவது ஆகே க்ளோஸ் பண்ணிக்கிட்டு.
தந்தில வர்ர நியூஸ் எல்லாம் பார்த்தா ஆயுள் ஸ்தானம் வேறே -மர்மஸ்தானம் வேறேனு நினைக்கவே மாட்டிங்க.
மரணம் -மைதுனம் -தனம்ங்கற என்னோட பதிவை தேடிபிடிச்சு படிங்க. புரியும். மரணத்துக்கும் மைதுனத்துக்கு என்ன சம்பந்தம்னு . (மைதுனம் மீன்ஸ் செக்ஸுங்கோ). மர்மஸ்தானம்/ஆயுள் ஸ்தானம் எப்படி இருக்கனும், ஆயுள் ஸ்தானாதிபதி எங்கருந்தா நல்லதுங்கற மேட்டர் எல்லாம் கில்மாவும் எட்டாவது இடமும்ங்கற பதிவுல டச் பண்ணியாச்சு. ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.
சரி மர்மம்னு ஆரம்பிச்சாச்சு. வெறுமனே மொக்கை போடறதை விட ஜோதிட சாஸ்திரத்துல உள்ள சில
மர்மங்களை காபரே ஆட வச்சு உங்களை காபரா பண்ணிர்ரனே.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.
பதிவை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க.
1 comment:
interesting thagaval!
Post a Comment