பெண்ணுக்கு “அந்த” இடம் எதை காட்டுகிறதுங்கற தலைப்பை பார்த்ததுமே உங்க மைண்ட்ல என்னென்னவோ வந்து போயிருக்குமே.
அஸ்கு புஸ்கு! பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் அவள் மாங்கல்யத்தை காட்டுதா அ அவளோட ஆயுளை காட்டுதாங்கற கேள்வியை தம்பி மணி கண்டன் எழுப்பியிருந்தாரு. அதற்கான பதிலாத்தான் இந்த பதிவு
பெயர்: சு.மணிகண்டன்
( இவர் கச்சா முச்சான்னு கேள்வி மழையே பொழிஞ்சிருக்காரு. அதனால ஹி ஹி தவணையில் பதில்)
வணக்கம் திரு. சித்தூர் முருகேசன் அவர்களே நான் தவறாமல் தங்கள் தளத்தினை
படிக்கும் வழக்கம் உடையவன்.
தங்களது ஜோதிட கட்டுரைகள் மிகவும் எளிமையாக விளையாட்டாக சொல்வது போல
இருந்தாலும் கருத்தாழம் மிக்கவை என்பதை என்னைப் போன்ற ஜோதிடத்தை
தொடர்ந்து படித்து, ஆய்வு செய்து வருகின்றவர்கள் நன்கு உணர்ந்தே உள்ளோம்.
தங்களது தளத்தில் உள்ள கேள்வி பதில் பகுதியை படித்தவுடன் எனக்கிருக்கும்
சில ஐயங்களை தங்களுக்கு எழுதி தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதில் எழுத வேண்டுகிறேன். தங்கள்
பதிவில் விளக்கினாலும் சம்மதமே.
வினா 1. (அ)
ஜோதிடத்தில் பொதுவாக ஆயுள் ஸ்தானமாக குறிப்பிடும் 8-மிடம் பெண்கள்
ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமாக குறிப்பிடப்படுகிறது அதாவது கணவரது
ஆயுளைக் குறிக்கிறது. இங்கு தீய கிரகங்கள் வலுப்பெற்றால் அவள்
விதவையாவாள் என்பது ஜோதிட விதி அல்லவா.
பெண்களின் ஆயுள் பலத்தை நிர்ணயிக்கும் ஸ்தானமாக 8-ம்மிடத்தை நாம்
கணக்கில் எடுத்துக் கொள்வதா அல்லது கணவரது ஆயுள் பலத்தை காண எடுத்துக்
கொள்வதா என்றொரு ஐயம் எனக்கு ஏற்படுகிறது தயவு செய்து விளக்கவும்.
பதில்:
ஜோதிட விதிகள் தீர்மானிக்கப்பட்ட காலத்தை மனசுல வச்சு ரோசிங்க. அந்த காலத்துல 100% மேல் ஷேவனிஸ்ட் சொசைட்டி. பெண்ணுக்கு கணவனை விட்டா வேற நாதி இல்லை. புருசன் தான் கதி. புருசன் போய் சேர்ந்துட்டா இவ ஸ்க்ராப். இப்படி ஒரு நிலையில மேற்படி விதி ஏற்பட்டிருக்கும். இன்னைக்கு நிலைமை ஓரளவாச்சும் மாறியிருக்கு.
ஆஃபீஸ் கோயர்னு வைங்க இந்த பலன் மாறலாம். ( அதாவது இவிக மாங்கல்யம் – ஐ மீன் இவிக வாழ்வு – கணவனோட ஆயுளோட முடிச்சு போடப்பட்டிருப்பது- அவன் செத்தா இவள் லைஃப் முடிஞ்சு போறது)
அட ..அவிக அப்பா சவுண்ட் பார்ட்டி மகள் பேர்ல ஒரு காலனியே எழுதி வச்சிருக்காருனு வைங்க. இது கூட வேணா புருசன் கவர்ன்மென்ட் சர்வெண்ட் அவன் செத்தா பல்க்கா பெனிஃபிட்ஸ் வரும்னு வைங்க அப்ப புருசனோட ஆயுள் முடிஞ்சு போனா இவ வாழ்க்கை முடிஞ்சுருமா? முடியாது.
அவன் இருந்த காலத்தை விட இறந்த காலத்துல பெட்டராவே ப்ளான் பண்ணி வாழலாமே. புரட்சிகரமா இந்த கருத்தை முன் வச்சாலும் நம்மாளுங்களை ( ஜோதிட விதிகளை நிர்ணயித்தவர்களை) லோ எஸ்டிமேட் பண்றதுக்கில்லை.
ஒரு ஃப்ரெண்டோட 15 நாள் வெளியூர் போய் சுத்திட்டு வர்ரிங்கனு வைங்க. அவனும் நீங்களும் ஒன்னா ஒரே பஸ்ல பயணம் செஞ்சு ஒரே லாட்ஜுல ஒரே ரூம்ல ஒரே பெட்ல படுக்கறிங்க. ஒரே டீக்கடையில தண்ணி சாப்டு , டீ சாப்டு, ஒரே ஓட்டல்ல டிஃபன் சாப்டு ,ஒரே மெஸ்ல லஞ்ச் சாப்பிடறிங்கனு வைங்க.
அப்ப ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல ஒரே விதமான உணர்வுகள் ஏற்பட ஆரம்பிக்கும் ( அட மூச்சா,கக்காலருந்து ஆரம்பிங்களேன்) .அப்படியிருக்க இரண்டற கலக்கும் கணவன் மனைவியரின் கலப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்னு எப்படி ஜட்ஜ் பண்ணமுடியும்.
அதுலயும் ஜாதக பொருத்தம் , நாடி பொருத்தம் அது இதுன்னு பார்த்து பார்த்து சேர்த்து வச்ச சோடியா இருந்தா ?
60 ஆம் கல்யாண சோடிகளை பார்த்திங்கன்னா ஒரு ஐடியா வரும். தாத்தா ரெம்ப சாஃப்டா மாறியிருப்பார்.பாட்டிக்கு லேசா தாடி கூட வந்திருக்கும். ஆண் பெண்ணா ,பெண் ஆணா மாற அத்தனை வருட தாம்பத்யம் தேவைப்படுது. உடலுறவுங்கறது கொடுக்கறதோ ,எடுக்கறதோ மட்டுமில்லிங்கோ . கொடுக்கல் வாங்கல் ரெண்டுமே நடக்குது.
இந்த கோணத்துல ரோசிச்சா அவளோட மாங்கல்யம் இவனோட ஆயுள் ரெண்டுமே பின்னிப்பிணைஞ்சிருக்கலாம். ஆனால் பல சோடிகளை பார்க்கறச்ச எலி -பூனை கணக்கா இருப்பாய்ங்க.ஒருத்தர் மீதான அடுத்தவரது உள்ளார்ந்த எதிர்ப்பே கூட இந்த ஃபார்முலாவை /விதியை உடைச்சுரலாம்னு தோணுது.
வேணம்னா இப்படி வச்சுக்கலாம் . வள்ளுவர் சொன்னாப்ல வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்ங்கற ஸ்டைல்ல வாழறவிக,
ஈருடல் ஓருயிரா வாழறவிக மேட்டர்ல ஒர்க் அவுட் ஆகலாம். புருசன் ஆன் ட்யூட்டி செத்தா என்ன வரும் .. லீவுல செத்தா என்ன வரும்னு கேட்கிற பதிவிரதைகள் மேட்டர்ல, பொஞ்சாதி பிள்ளை பெத்து உடம்பு நாரா கிழிஞ்சு ஹால்ல படுத்திருக்க நடையில வேலைக்காரிய படுக்கப்போடற பிக்காலிங்க மேட்டர்ல ஒர்க் ஆகாம போயிரலாம்.
சக பதிவன்பர்களே! வாசக தெய்வங்களே!
கீழ் காணும் கேள்விகளுக்கு தங்களுக்கோ தங்கள் குடும்ப ஜோதிடருக்கோ விடை தெரிந்தால் நீங்களும் பதிலளிக்கலாம். (ஜோதிடரின் பதில் என்றால் அவரது பெயர் விலாசம்,ஃபோன் நெம்பர் அனைத்துக்கும் அனுமதி உண்டு)
(8-ம்மிடம் 7-மிடமான கணவர் ஸ்தானத்திற்கு 2-மிடமாக வருவதால் மாரக
ஸ்தானமாகிறது என்று கொண்டால் அவ்வாறு ஆண்கள் ஜாதக்திலும் 8-மிடத்தை
மனைவியின் மாரக ஸ்தானமாக எடுத்துக் கொண்டு பலன் கூறலாமா என விளக்கவும்)
வினா 2.
ஒரு ஜாதக்ததை பார்த்து அது இறந்தவருடைய ஜாதகம் என்று உடனே கண்டறிய எதாவது
விதிமுறைகள் உள்ளதா அல்லது தசா புத்தி கணக்கிட்டு தான் அவர் உயிருடன்
இல்லை என்று கூற வேண்டுமா? ஆயுளை கணிக்க பல விதிமுறைகள் உள்ளதால் இவ்வாறு
உடனே சரியாக கண்டறிந்து பின்னர் பலன்களை கூற ஜோதிடத்தில் வழிகள் உண்டா
என்ற ஐயம் எழுகிறது. விளக்க வேண்டுகிறேன்.
வினா 3
ஜாதகத்தை பார்த்து ஆண் அல்லது பெண் ஜாதகம் என்று சொல்ல விதிமுறைகள் என்ன?
லக்னத்தில் பெண்கிரகங்கள் வலுத்தாலும் பெண்களது குணாதிசயத்தை உடைய ஆணாக
இருந்தால் எப்படி கண்டறிவது விளக்க முடியுமா. மற்ற விதிகள் எதுவும்
சரியாக வரவில்லை.
வினா 4.
ஜாதகத்தை பார்த்து பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் எண்ணிக்கையை சொல்லும்
விதிமுறைகள் பல சரியாக வருவதில்லை. தங்கள் அனுபவத்தில் ஏதாவது
வழிமுறைகளை கண்டறிந்துள்ளீர்களா என விளக்கவும்.
வினா 5.
ஒரு கிரகம் தனது தசா புத்தியில் எந்த வரிசைப்படி பலன்களை தரும்.
1. தான் நின்ற வீட்டின் ஆதிபத்ய பலன்
2. அக்கிரகத்தின் சொந்த வீட்டிற்குரிய ஆதிபத்ய பலன்
3. அக்கிரகத்தின் காரக பலன்
4. அக்கிரகம் தன்னோடு இணைந்த கிரகத்தின் பலன்
5. அக்கிரகம் பார்த்த வீட்டின் பலன்
6. அக்கிரகத்தை பார்த்த கிரகத்தின் பலன்
7. அக்கிரகம் நின்ற நட்சத்திர அதிபன் நின்ற வீட்டின் பலன்
மேலே கொடுத்துள்ள வரிசையில் திருத்தம் அல்லது ஏதேனும் விடுபட்டு
இருந்தால் சரியாக தர வேண்டுகிறேன்.
வினா 6.
ராகு கேதுக்களின் தசா புக்தி பலன்களை எவ்வாறு நிர்ணயம் செய்வது ராகு
தசாவில் கேது புக்தி என்று வருகிறது இருவரும் தனியாக பாவங்களில் நின்று
தங்களது நட்சத்திரங்களில் மாறி அமர்ந்து உள்ளனர் சரியாக பலன் கூற
முடியவில்லை விளக்க முடியுமா.
வினா 7.
ஒரு கிரகத்தின் தசாவின் சுயபுக்தியில் பலனளிக்காது என்று ஜோதிடத்தில்
கூறப்பட்டுள்ளதே பலருக்கு சுயபுக்தி காலம் வருட கணக்கில் வரும் அந்த
காலகட்டங்களில் ஏற்படும் பலன்களை எவ்வாறு நிர்ணயம் செய்வது.
1 comment:
வினா 3-கு விடை:
மேஷம் ஆண்வீடு; ரிஷபம் பெண்வீடு. அப்படியே ஒன்றுவிட்டு ஒன்று ஆண்வீடு, பெண்வீடு. ஆண்வீடுகளில் லக்னம் அமைந்தால் ஜாதகர் ஆண்; பெண்வீட்டில் அமைந்தால் ஜாதகர் பெண்.
ஜாதகம் கணிக்கிற போது பாலுக்கு ஏற்ப லக்னம் அமையாவிட்டால், தரப்பட்ட பிறந்தநேரத் தகவல் தவறென்று கொண்டு, பிறந்த நேரத்தை முன்னே பின்னே தள்ளிக்கொள்ள வேண்டும்.
ஏனைய கேள்விகளுக்கு அறிஞர்கள் உதவுவார்கள் (நான் இக் கலையைக் கைவிட்டுப் பத்துப் பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. நிறைய மறந்துவிட்டது).
Post a Comment