'>

Thursday, May 16, 2019

ஆறில் இருந்து அறுபது வரை :ராகு கேதுக்கள் பலமும் -பலவீனமும்


குறிப்பு :
ராகு / கேது பலம் உடையவர்களிடமும் இந்த இயல்பு இருந்தாலும் ராப்போதுகளில் புதுமையான – உருப்படியான -சட்டத்துக்குட்பட்ட செயல்களில் ஈடுபடுவர். ஆனால், சர்ப்பதோஷர்கள் சதி திட்டங்கள் தீட்டுவதும் - சட்ட விரோத செயல்கள் குறித்து சிந்திப்பதுமாய் இருக்கலாம். கள்ள உறவு கேஸ்களில் மெஜாரிட்டியினர் சர்ப்பதோஷர்களாக இருப்பதற்கும் இதுவே காரணம்.
பரிணாம சித்தாந்தத்தை கண்ட டார்வின் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று மட்டும் சொல்லவில்லை. நீரில் தோன்றிய முதல் உயிரில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளின் கல்யாண குணங்களும் மனிதனில் இருப்பதாய் சொல்லி இருக்கிறார்.
சில வகை பாம்புகள் புணர்வுக்கு பிறகு பெண் பாம்பின் புழையில் ஒரு வித சுரப்பைச் செலுத்தி சீல் இடும் என்று படித்திருக்கிறேன். இதை சட்டப்படியான மனைவி படி தாண்டினாள் என்று போட்டு தள்ளுவோரைக் காட்டிலும் கள்ள காதலி கைமாறினாள் என்று போடுவோரும் / கள்ளக்காதலியின் கணவனை போடுவோருமே அதிகம் என்ற செய்தியோடு இணைத்துப் பாருங்கள். சர்ப்பதோஷர்களுக்கு இந்த "சீல்" இடும் மனோதத்துவம் இருக்கலாம் என்று தோன்றுகிறதல்லவா? ஸ்தூலமாய் முடியாததை அவர்கள் மனம் "கட்டுப்பாடுகள்" மூலம் செயல்படுத்துகிறது போலும்.
கறையான் புற்றில் பாம்பு குடியேறுவது போல் இவர்கள் இதரரின் திறமை – உழைப்பு - இயக்கங்களை கைப்பற்றலாம். அதே சமயம் ராகு / கேது பலமுடையவர்கள் ஆதர்ச புருஷர்களின் ஆதர்சங்களை மற்றொரு தளத்துக்கு கொண்டு செல்வார்கள்.
இப்படி ராகு / கேதுக்களின் காரகம் என்பது ஜீன்களில் துவங்கி பல அம்சங்களுக்கு விரிகிறது.








No comments: