ராகு / கேதுக்கள் நின்ற பலன் :
ஜாதக சக்கரத்துல உசுருள்ள இடங்கள்னா தெரியுமா?
1-3-4-5-6-7-9-11 இதெல்லாம் உசுருள்ள இடங்கள்
1 - நீங்க
3 - இளைய சகோதரம்
4 - தாய்
5 - குழந்தைங்க
6 - தாய்மாமன்
7 - மனைவி
9 - அப்பா
11- மூத்த சகோதரம்
(இந்த பட்டியலை உள்வாங்கிருங்க. ஏன்னா இதே நூலின் பல அத்தியாயங்களில் இது பிரஸ்தாபிக்கப்பட
இருக்கிறது)
இந்த ராகு / கேதுக்கள் மேற்கண்ட உசுருள்ள இடங்களில்
இருந்தால் அவிகள (லக்னத்துல இருந்தா உங்களை – இதர இடங்களில் இருந்தா அந்த பாவ காரக நபரை) என்ன பண்ணுவாய்ங்க?
ராகு இருந்தா உருக்குவார். இல்லை ஊளைச்
சதையாக்கிருவாரு. எல்லாமே மூடு மந்திரமா இருக்கும். பகல்ல தூங்கி வழிவாய்ங்க.
ராத்திரில செம ஷார்ப் ஆயிருவாய்ங்க (பலான அர்த்தம்லாம் இல்லை). மேலை நாட்டு
பண்பாடு, பழக்கவழக்கங்களை
ஆதரிப்பாய்ங்க. சொந்த இனம், மதம், மொழி, சாதியினரோடு – ஏன்
குடும்பத்தாரோடு கூட ஒட்டுதல் இருக்காது.
எந்த வேலையா இருந்தாலும் ஊரு நாட்ல எவனும்
செய்யாத மாடல்ல செய்ய நினைப்பாய்ங்க. ராகு பலம் இருந்தா கொஞ்ச காலம் சமூகத்தால
அவதிப்பட்டாலும் அதே சமூகத்தால அங்கீகரிக்கப்படுவாய்ங்க. லைஃபே ஒரு கேம்ப்ளிங்
மாதிரி இருக்கும். நைட் ஷிஃப்ட் வேலையில இருக்கலாம். வெளிநாட்ல இருக்கலாம். ஈசி
மணி மேல கவர்ச்சி சட்டவிரோத செயல்கள், சதி செய்யலாம். சதிக்கு பலியாகலாம்.
மேற்படி உசுருள்ள இடங்கள்ள கேது இருந்தா
சம்பந்தப்பட்டவரை சாமியார் / சாமியாரிணி ஆக்கிருவாரு. நம்ம ஜாதகத்துல நாலாமிடத்துல
இருந்தாரு. நாம டீன் ஏஜ்ல என்டர் ஆகற வரைக்கும் அப்பா ஜில்லா ஜில்லாவா
ட்ரான்ஸ்ஃபர். அம்மா நாலு பிள்ளைங்க, ஒரு மாமியாரோட அல்லாடி அல்லாடி ஜென் நிலைக்கு வந்துட்டாய்ங்க.
இந்த ராகு / கேது ரெண்டு பேருமே உசுருள்ள
இடத்துல இருந்தா சம்பந்தப்பட்டவுகளுக்கு வைத்திய சாஸ்திரத்துக்கு பிடிபடாத
நோய்குறிகளையும், உபாதைகளையும்
கொடுப்பாய்ங்க. வீக்கம் / முறையற்ற வளர்ச்சி இனம் புரியாத பலகீனத்தைக் கொடுப்பாங்க.
ராகு லக்னத்துல இருந்தாலும் 7ல இருந்தாலும் ஒரே பலனானு கேப்பிக. ராகுவோ,
கேதுவோ லக்னத்துல இருந்தா ஏழைப் பார்ப்பாங்க. ஏழுல இருந்தா லக்னத்தை பார்ப்பாங்க.
இவர் அவரை பார்ப்பாரு, அவரை இவரு
பார்ப்பாரு. சதா சர்வ காலம் ஒருத்தருக்கொருத்தர் சம சப்தத்துல, அதாவது 180 டிகிரியிலேயே இருக்கிற பார்ட்டிங்க.
ராகுவுக்கும் கேதுவுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரே வார்த்தையில சொன்னா ராகு
உசுருள்ள இடத்துல இருந்தா அந்த கேரக்டரை
1. சூதாடியாவோ அல்லது
வாழ்க்கையையே ஒரு சூதாட்டமா மாத்திக்கிறவராவோ
2. ஆல்கஹாலிக்காவோ
3. பேஷண்டாவோ
(பாடியில பாய்சன்
அல்லது ஃபாரின் பாடிஸ் அல்லது ஒத்துப்போகாத மெடிசின் பெரிய புரட்சிய வெடிக்கச்
செய்யும்)
4. உருப்படாத ஆசாமியாவோ
(அதாவது மக்கள்
பார்வையில ஜாதகர் என்னமோ சின்சியரா ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டே தான் இருப்பாரு)
5. ஈசி மணிக்காக
மெனக்கெடுபவராவோ மாத்திருவாரு அல்லது அப்படி ஒரு தோற்றம் சமுதாயத்துல
ஏற்பட்டுரும். இவரோட இன்டராக்ட் ஆகும் சனம் இப்படியாக்கொத்த கிராக்கிகளா
இருப்பாங்க.
இதுவே உசுருள்ள இடத்துல கேது இருந்தா அந்த
பார்ட்டிய பிச்சைக்காரரா மாத்திருவாரு அல்லது சன்யாசி ஆக்கிருவாரு. (உ.ம் 9 ஆம் பாவத்துல இருந்தா அப்பாவ)
ஒரு ஜாதகத்துல ராகு / கேது கெட்டாலே நாஸ்தி
தான். இது பாடி, மைண்ட், வே ஆஃப் திங்கிங், டெசிஷன் மேக்கிங், இன்டராக்சன், கொடுக்கல் வாங்கல், மோட் ஆஃப் லிவிங் இப்படி எல்லாத்தையும் நாறடிச்சுரும். இப்ப கொஞ்சம்
டீட்டெய்லா பார்ப்பம்.
No comments:
Post a Comment