'>

Thursday, May 16, 2019

ஆறில் இருந்து அறுபது வரை : ராகு / கேதுக்களும் சர்ப்பங்களும்


ராகு / கேதுக்களும் சர்ப்பங்களும் :
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் ராகு / கேது கெட்டிருந்தால், அது சமூகத்தை / சகாக்களை பாம்பாக பார்க்கிறது. சமூகம், அதை பாம்பாக பார்க்கிறது.
பாம்புகளுக்கு சிறுநீர் - மலம் - விந்து மூன்றும் ஒரே புழை வழியே வெளியேறும். இதற்கு க்ளோயகா என்று பெயர். எனவே சர்ப்பதோஷம் உள்ளவர்களுக்கு சிறுநீரில் விந்து வெளியேறுதல் - மலம் கழிக்க முக்கும் போது ஸ்கலிதமாதல் இத்யாதி நடக்கலாம்.
பாம்பு இரையை அப்படியே விழுங்கும். இதை போல் சர்ப்பதோஷர்களுக்கும் இந்த வழக்கம் இருக்கலாம். இது அஜீரணம் முதற்கொண்டு பயோகெமிஸ்ட்ரியே மாறுவது வரை கூட போகலாம். இப்படி மெல்லாமல் விழுங்குவதால் வயிற்று பகுதிக்கு அதிக அளவு ரத்தம் பாய - உண்ட மயக்கம் ஏற்படலாம். இதனால் அவர்களது வேலை - ஆட்டிட்யூட் எல்லாமே பாதிக்கும்.
பாம்பு பகை என்பது விட்டலாச்சார்யா - ராமநாராயணன் படங்களை ஞாபகப்படுத்தினாலும் சர்ப்பதோஷர்களுக்கு இந்த ஊமை பகை - நாட்பட்ட பகை இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.
பாம்பு நம்மை கொத்துவதும் - பாம்பை நாம் அடிப்பதும் பயத்தின் காரணமாகவே. நாய்கள் பயப்படுபவர்களை மட்டும் கடிக்க காரணம், அச்சமயம் வியர்வை வாசத்தை வைத்தே. இதே லாஜிக் தான் பாம்புகள் விஷயத்திலும் வேலை செய்கிறது. சர்ப்பதோஷர்கள் பாம்புக்கு அஞ்சுவார்கள் (சப்-கான்ஷியல் இன்ஸ்டிங்ட் ப்ளஸ் சர்வைவல் இன்ஸ்டிங்ட் காரணமாக). இவர்களது வசிப்பிடமும் - வேலை பார்க்குமிடமும் பாம்பு நடமாட்டத்துக்கு வாய்ப்புள்ளதாகவே அமையும். எனவே, இவர்கள் மனதில் அச்சம் - அச்சத்தால் வியர்வை - வியர்வையில் பிரத்யேக வாசம் காரணமாக பாம்புகள் இவர்களை கொத்தலாம்.
பாம்புகளின் புணர்வு என்பது நீண்ட நேரம் நிகழும் ஒன்று. இதை சர்ப்பதோஷர்கள் முயற்சிக்கலாம். ஆனால், மேற்சொன்ன க்ளோயகா எஃபெக்டால் அது அசாத்தியமாகி மீண்டும் மீண்டும் முயற்சிக்க முயன்று நிம்ஃபோக்களாக மாறலாம்.
பாம்புகள் இரவுகளில் சஞ்சரிப்பவை. மனிதர்களிடம் இருந்து தம்மை ஒளித்துக் கொண்டு வாழும். இதே போல் சர்ப்பதோஷர்கள் பகலில் உறக்க கலக்கம் - மந்தத்தன்மையுடன் இருப்பதையும் இரவுகளில் அதீத உற்சாகத்துடன் இயங்குவதையும் நானே பார்த்துள்ளேன்.

No comments: