1 - 7 ல் ராகு / கேது :
அமாவாசை இருட்டு, பவர்கட், கூலிங்கிளாஸு
போட்டிருக்கிங்க. அப்போ பாதை எப்படி தெரியும்? மச-மசன்னு தெரியும். லக்னத்துலயோ அல்லது சப்தமத்துலயோ ராகு / கேது இருந்தா
இதான் நிலைமை. கயிறா? பாம்பா? டைலம்மாலயே இருப்பிங்க. நல்லவன்லாம் கெட்டவனா
தெரீவான், கெட்டவன்லாம் நல்லவனா
தெரீவான். பாம்புன்னு பயந்து நடுங்குவிங்க. பின்னால வர்ரவன் அசால்ட்டா தாண்டி
போயிருவான்.
இது மட்டுமா? இதே நிலைமை உங்க மனைவிக்கும் வந்துரும். (அவிக ஜாதகத்துல சர்ப்பதோஷமே
இல்லின்னாலும் ஜஸ்ட் ஒன்னரை வருசத்துல இந்த ஸ்டேஜ் வந்துரும்).
பாம்பு கடிச்சுருச்சுன்னு வைங்க, செம மப்புல
இருக்கிங்கன்னு வைங்க, அட விசத்தையே குடிச்சு வச்சுட்டிங்கனு வைங்க, அப்ப உங்க
மைண்ட் எப்படி எல்லாம் வேலை செய்யும்?
பெரும் குழப்பத்துல இருக்கும். பாம்பு தான்
கடிச்சுதா? அல்லது பூச்சி பொட்டா? பாம்பே கடிச்சிருந்தாலும் அது விசமுள்ள பாம்பா? அல்லது டுபாகூரா? அடிச்ச சரக்கு செரியில்லையா? ஒரு வேளை டூப்ளிகேட்டா? இப்படி
ஒரு குழப்பத்துல இருக்கும் போது எல்லாமே மச-மசன்னு ஆயிரும்.
இன்னொரு உதாரணத்தை சொல்றேன். நேத்திக்கு
முகத்துல துண்டை போர்த்தி சனம் செம கும்மு கும்மிட்டாய்ங்க, பகல்ல அதே ஏரியாவுக்கு
வர்ரிங்க, அப்ப உங்க மனசு எப்படி வேலை செய்யும்? பார்க்கிறவனை எல்லாம் இவனா இவனான்னு சந்தேகப்பட்டுக்கிட்டுத்தானே
இருக்கும்.
ஆக இது வரை சொன்ன உதாரணங்களோட சாரம்: ஞாபக சக்தி
இருக்காது, ஜட்ஜிங் சரியிருக்காது, சந்தேக
புத்தி வந்துரும். மனதளவிலேனும் சில தீய எண்ணங்கள் இருக்கும். (இதர கிரக அமைப்பும்
பல்பு வாங்கியிருந்தா செயலாகவும் வாய்ப்புண்டு). இந்த எண்ணங்கள் காரணமாக இவற்றை
யாராவது கண்டுபிடிச்சிருவாங்களோங்கற பதைப்பு - உதைப்பு இருந்துகிட்டே இருக்கும்.
இவிக மைண்ட் டிஸ்டர்பன்ஸுக்கு இதுவும் ஒரு காரணம்.
No comments:
Post a Comment