ராகு - கேதுக்கள்
ஆறில் இருந்து அறுபது வரை என்பது ஒரு வசதிக்காக – எளிமைப்படுத்தலுக்காக வைக்கப்பட்ட தலைப்பு
தான். உண்மையில் தந்தையிடமிருந்து உயிரணு விடுபட்டு - தாயின் முட்டை கருவை துளைத்த
கணம் முதலே கிரகங்கள் தம் பாதிப்பை துவக்கி விடுகின்றன. தந்தையின் உயிரணுவின்
மீதும் – தாயின் முட்டைக்கரு மீதும்
அவரவர் ஜாதகங்களிலான கிரகங்கள் ஏற்கனவே தம் தாக்கத்தை செலுத்தியிருக்கும் என்று
சொல்லவும் வேண்டுமா என்ன?
கிரகங்களை பட்டியலிட சொன்னால் ஒரு ஜோதிடர்
சூரியன் – சந்திரன் – செவ் – ராகு – குரு – சனி – புதன் – கேது -சுக்கிரன் என்று
தான் பட்டியலிடுவார். காரணம் தசைகள் இந்த வரிசையில் தான் வருகின்றன. ஆனால் நான்
ராகு - கேதுவில் இருந்து இந்த நூலை துவங்குகிறேன். ஏன் இப்படி என்று போகப் போக
புரிந்து கொள்வீர்கள்.
ராகு - கேதுக்களின் இருப்பை வைத்து நாகதோஷம் / சர்ப்பதோஷம்
உள்ளதா என்று தானே கணிக்க முடியும். இதெல்லாம் திருமண சமயத்தில் தானே
பார்ப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறதல்லவா?
ராகுவின் பிரதான காரகம் “பிதாமஹ காரகன்”. கேதுவின் பிரதான காரகம் “மாதாமஹ
காரகன்”. அதாவது, ராகு - தந்தைவழி
தாத்தா / பாட்டியையும்; கேது - தாய்வழி தாத்தா / பாட்டியையும் குறிப்பவர்களாவர்.
மேற்படி தாத்தா / பாட்டிகளின் நல்ல அம்சங்கள்
(மரபியல் கூறுகள்) குழந்தைக்கு வர வேண்டும் என்றால் அதன் ஜாதகத்தில் ராகு -
கேதுக்கள் நல்ல இடத்தில் அமைந்திருக்க வேண்டும். கருவிலே திரு என்றால் இது தானே? விஞ்ஞான பூர்வமாய் சொன்னால் பாசிட்டிவ்
ஜெனட்டிக் ஃபீச்சர்ஸ் குழந்தைக்கு வர ராகு - கேது பலம் அவசியம்.
குழந்தையின் பெற்றோர்கள் என்னமோ 32 லட்சணங்களும் பொருந்தியவர்களாய் இருந்தாலும்
விதையும் – நிலமும் அமோகமாய்
இருந்தாலும் குழந்தை உருப்படாமல் போக அதன் ஜாதகத்தில் ராகு – கேது கெட்டிருந்தால் போதும்.
பொது விதிப்படி ராகு – கேதுக்கள் 3-4-6-10-11-12
பாவங்களில் நின்றால் தோஷமில்லை. நல்லது. ராகு – கேதுக்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சம சப்தகத்தில் இருப்பார்கள். அதாவது
ஒருவருக்கொருவர் 7ஆம் இடத்தில்
இருப்பார்கள். இதன்படி ராகு 3ல்
இருந்தால் கேது ஒன்பதில் இருப்பார். மூன்றில் உள்ள ராகு மனோ தைரியத்தை தருவார்.
இது நல்லதே. ஆனால் ஒன்பதில் உள்ள கேது அப்பாவை சாமியாராக / பிச்சைக்காரராக்கி
விடுவாரே?
ஆறில் உள்ள ராகு சத்ரு ஜெயம் - ரோக நிவர்த்தி - ருண
விமுக்தி போன்ற நல்ல பலனை தந்தாலும் 12ல் உள்ள கேது தூக்கம் - தாம்பத்யம் இத்யாதியில் வில்லங்கம் செய்வாரே?
10ல் உள்ள ராகு புதுமை
பித்தனாக்கி - தொழிலில் கொடிகட்டி பறக்க விட்டாலும் நாலில் உள்ள கேது தாய்க்கு
நலிவை தருவாரே.
11ல் உள்ள ராகு சினிமா
லாட்டரி - வைன்ஸ் போன்ற தன் காரகங்களில் ஹிட் அடிக்க வைத்தாலும் ஐந்தில் உள்ள கேது
அவமானம் – மறதி - புத்தி குழப்பம் போன்ற தீய பலனை தந்து விடுவாரே?
ராகு - கேதுக்கள் எங்கெல்லாம் இருந்தால் நல்லது
என்று சொல்லப்பட்டுள்ளதோ அங்கு அவை இருந்தால் இத்தனை பிரச்சினை வரும் எனும் போது
இங்கே ராகு - கேதுக்கள் இருந்தால் நல்லது என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது?
ராகு - கேதுக்கள் மேற்படி பாவங்களில் நிற்பதால்
உலகியல் ரீதியாக மேற்சொன்ன தீய பலன் விளைந்தாலும் தாய் / தந்தைவழி - தாத்தா / பாட்டிகளின்
நல்ல அம்சங்கள் குழந்தைக்கு வருவதை அவர்கள் அனுபவத்தில் கண்டிருக்க வேண்டும்.
ராகு - கேதுக்களை தாய் / தந்தைவழி – தாத்தா / பாட்டிகளின்
நல்ல அம்சங்களை கொண்டு வரும் தூதர்கள் என்ற கோணத்தில் இப்போது பார்ப்போம்.
No comments:
Post a Comment