லக்னாதிபதி 6 ல் :
வாழ்நாள் முழுக்க சத்ரு, ரோக, ருண உபாதைகள்.
இதற்கு பரிகாரம், ஒரே சப்ஜெக்டை
எடுத்துக்கிட்டு பாசிட்டிவா ஒரு பக்கம், நெகட்டிவா ஒரு பக்கம் எழுதிப் பாருங்க.
உ.ம் வரதட்சிணை நல்லது / வரதட்சிணை நல்லதல்ல.
நம் நாட்கள் காலையில் டீ / காபியில் துவங்கி
இரவு பாலில் முடிகின்றன. எனவே, பால் கடனுக்கு / அக்கவுண்ட்ல / கடன் வாங்கிய காசில்
வாங்கவும். குடும்பத்தோடு டிவியில் வரும் விவாத நிகழ்ச்சிகள் பார்க்கவும்.
நகராட்சி, மாநகராட்சி பகுதியளவிலான
பிரச்சினைகளை ஏதேனும் புனைப் பெயருடன் லெட்டர் டு எடிட்டர் பகுதிக்கு எழுதி வரவும்.
எப்போதும் புனைப் பெயருக்கு சொந்தம் கொண்டாடாதீர்கள் அல்லது ஃபேக் ஐடி
வச்சுக்கிட்டு சமூக ஊடகங்களில். வீட்டைத் தேடி ஆட்டோ வர அளவுக்கெல்லாம் போயிராதிங்ணா.
No comments:
Post a Comment