தனபாவம் :
“பணம் பாதாளம் வரை
பாயும்” இது தமிழக அரசியலில் பிரபலமான
கொட்டேஷனாயிருச்சு. சொல்வலன் சோர்விலன், வாயுள்ள பிள்ளை பிழைக்கும். (நான் டிடிவியை சொல்லல). நல்லதொரு குடும்பம்
பல்கலைக் கழகம், பஞ்சேந்திரியானால்
நைனம் பிரதானம் (ஐம்பொறிகளில் தலையாயது கண். இதெல்லாம் நீங்க அறியாததா?
தனபாவம் என்பது உங்கள் வருவாய், வாக்குவன்மை, குடும்பம், கண்கள்
ஆகியவற்றை காட்டும் பாவம். இங்கு சுபர் நின்றால் அதிகபட்ச கன்ஸ்யூமர் சர்ப்லஸ்
உங்க க்ளையண்ட்ஸுக்கும், குறைவான
மார்ஜின் உங்களுக்கும் கிடைக்கும். நீங்க கிடைச்ச காசை போதும்னு சொன்னாலும்
பரவால்ல வச்சுக்கங்கனு கூடுதலா கொடுப்பாங்க.
இங்கு நின்ற கிரகம் யாவும் ஏழாம் பார்வையாய்
எட்டையும் பார்க்கும். இங்கு சுபகிரகம் நின்றால் ஐசியு எல்லாம் பார்க்காம பொட்டுனு
போயிரலாம்.
இங்கே பாவகிரகம் இருந்தா எதிராளி தோள்ள துண்டை
போட்டு இழுத்து வசூல் செய்விங்க. உசுரும் சில காலம் இழுத்து தான் போகும்.
சுபர் நிற்பின் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை
கூடும். பாவர் நிற்பின் குறையும். சுபர் நிற்பின் குறைவாக பேசுவீர்கள், ஆயுள்
கூடும். பாபர் நிற்பின் அதிகம் பேசுவீர்கள், ஆயுள் குறையும்.
சுபர் நிற்பின் குடும்பத்தினர் வாலன்டியரா கோ-ஆப்பரேட்
பண்ணுவாங்க. பாபர் நிற்பின் மிரட்டி, உருட்டி வேலைய சாதிக்கனும்.
No comments:
Post a Comment