'>

Monday, May 21, 2012

பிரபல கிறிஸ்தவ மதபிரசாரகர் கொலை வழக்கில் கைது


கே.ஏ.பால். இவர் பிரபல கிறிஸ்தவ மதபிரசாரகர். ஏழைக்குடும்பத்தில் பிறந்த பால் பத்தாங்கிளாஸு ஃபெயில். படிப்புக்கு மங்களம். நிலக்கரி சுரங்கத்துல தொழிலாளி. பிறவு ஒரு கிறிஸ்தவ மிஷினரியில வாட்ச் மேன். ஒரு பாதிரியார் கிட்டே மத பிரசாரகரா பயிற்சி.

ஒரு சமயம் பாதிரியாருக்கு உடல் நலம் சரியில்லாது போக நம்மாளு வெளி நாட்டுக்கு போயி மதபிரசாரம் செய்தாரு.அங்கனருந்து செமை பல்பு தேன். கோடிக்கணக்கான ரூபாய் காலடியில குவிஞ்சது. சொத்து வந்தாலே தகராறு வராம இருக்குமா? தம்பிக்காரரோட சொத்து தகராறு வந்துருச்சு. தம்பி கொலையானாரு. (பால் தான் போட வச்சாருன்னு புரிஞ்சிருக்குமே)

கே.ஏ பால் பற்றி சொல்லனும்னா கிறிஸ்தவ பிரசார உலகத்துல ஒரு சுப்பிரமணியம் சாமி. திடீர் திடீர்னு குண்டை தூக்கி போடுவாரு. பிரஜா சாந்தின்னு ஒரு அரசியல் கட்சியை கூட ஆரம்பிச்சாரு. நடக்க விருக்கும்
ஆந்திர இடைத்தேர்தல்களில் அவரோட கட்சியும் போட்டியிடுது.

கட்சிக்காக பிரசாரம் செய்ய சூறாவளி சுற்றுப்பயணத்தை துவங்கினாரு. தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடர்வதாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸ் கோடீஸ்வர்ராவ் என்ற நபரை அரெஸ்ட் பண்ணாய்ங்க. அவர் கிட்டருந்து சில சிடிக்களை கைப்பற்றினாய்ங்க. அதுல தம்பியை போட்டுத்தள்ளின கொலையாளிகளை போட்டுத்தள்ள சிலரிடம் பேரம் பேசிய கே.ஏ.பாலின் பேச்சு பதிவாகியிருந்ததாம்.

பாலை கஸ்டடியில எடுத்த போலீஸ் விசாரணை மேற்கொள்ள அவிக கிட்டயும் பேரம் பேசியிருக்காரு கே.ஏ.பால். இதை போலீஸ் காரவுக ரகசிய வீடியோவில் பதிவு பண்ணியிருக்காய்ங்க.

தற்போதைய நிலை:
கே.ஏ.பால் ரிமாண்ட் செய்யப்பட்டு கம்பி எண்ணுகிறார்

கமெண்ட்:
கொய்யால மதத்தின் பேரால சொத்து சேர்க்கிறதுலயும் -சொத்துத்தகராறுல போட்டு தள்றதுலயும், போட்டு தள்ள உபயோகிச்சவுகளையே போட்டுத்தள்றதுலயும் எல்லா மத தலீவரும் ஒருத்தருக்கொருத்தரு சளைச்சவுக இல்லை போல

No comments: