அண்ணே வணக்கம்ணே !
காவிரி பிரச்சினைங்கறது தமிழக அரசியல்வாதிகளுக்கு அல்வா மாதிரி. அதுலயும் சம்மர் வந்தா சவுண்டு ஓவராயிரும். சம்மர் முடிஞ்சுருச்சுன்னா எவனும் சீந்த கூட மாட்டான்.
ஒரு நதி உருவாகிற பகுதி மக்களுக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கோ அந்த அளவு உரிமை மேற்படி நதி ஓடிவர்ர - கடல்ல கலக்கிற பகுதியில் உள்ள மக்களுக்கும் அதே அளவு உரிமை இருக்கனும்ங்கறது உலக அளவுல முடிவான மேட்டரு.
இன்னம் சொல்லப்போனா வால் பகுதியில உள்ள மக்களுக்கு வெள்ள அபாயம் இருக்கிறதால இன்னம் கொஞ்சம் போட்டு கொடுக்கனும்.
காவிரி கர்னாடகத்துல உருவாகுது. வால் பகுதியில தமிழகம் இருக்கு. கர்னாடகம் தன் பகுதியில 4 அணைகளை கட்டி தண்ணீரை தேக்கி வச்சுக்குது .
இதனால அவிகளா பார்த்து திறந்து விட்டாத்தான் தமிழகத்துக்கு தண்ணீர்ங்கற நிலைமை. இந்த மேட்டர்ல என்னென்னமோ பஞ்சாயத்து பண்ணி செட்டில்மென்ட் பண்ணாலும் கர்னாடகம் ஆன தந்திரம்லாம் செய்து அழிச்சாட்டியம் பண்ணுது.
அஃதாவது கோடை கால நீர் பகிர்வுக்கு நடுவ்ர் மன்ற இடைக்கால தீர்ப்புப்படியோ அல்லது மத்திய் நீர்வள ஆணையம் வகுத்த ஃபார்முலா படியோ கர்னாடகம் விவசாயத்தை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுப்படுத்தக்கூடாது.
ஆனால் அவிக சகட்டுமேனிக்கு விரிவுப்படுத்திக்கிட்டே போறதால தண்ணீர் தேவை அதிகரிச்சுக்கிட்டே போகுது. இதனால தான் பிரச்சினையே வருது. மழைகாலத்துல காவிரி நீர் பிடிப்புபகுதிகள்ள செமை மழை வெளுத்துவாங்கும். அணைகள் நிரம்பி வழியும். திறந்து விடாட்டா அணைகள் காலிங்கற கட்டத்துல மட்டும் தன் அணைகளை காப்பாத்திக்க உபரி நீரை கச்சா முச்சான்னு திறந்து விட்டுருது.. அதாவது தமிழகத்தை ஒரு வடிகால் பகுதியா உபயோகிச்சுக்குது.
இப்படி திறந்து விட்ட தண்ணீரை யெல்லாம் கணக்கு பண்ணி உங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை விட அதிகமாவே திறந்து விட்டாச்சுன்னு கணக்கு சொல்லிட்டு கோடைகாலத்துல ஆப்படிச்சுருது.
பிப்ரவரி முதல் மே மாதம் வரைக்கும் ,பிறகு ஜூன் முதல் செப்டம்பர் மாசம் வரைக்கும் தமிழகத்துக்கு தண்ணிரை திறந்து விடாம 4 அணைகளில் உள்ள தண்ணீரையும் கர்னாடகமே உபயோகிச்சுக்கும். மத்த மாசங்கள்ள அணை அடிச்சுக்கிட்டு போயிருங்கறதால தண்ணீரை திறந்து விட்டுரும். இதான் கர்னாடகத்தோட தந்திரம்.
ஓவராலா பார்த்தா தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தந்தாச்சு போலதான் தோனும்.ஆனால் மாச வாரியா பார்த்தாதான் கர்னாடகத்தோட தந்திரம் புரியும்.
2012,பிப், 1 ஆம் தேதி நிலவரம்:
கர்னாடகாவில் 4 அணைகளில் இருந்த தண்ணீர் 58.50 டி எம் சி
2012,மே 14 ஆம் தேதிப்படி 4 அணைகளில் இருந்த தண்ணீர் 28.176 டி.எம்.சி ( ஆக ரெண்டரை மாசத்துல 30 டி.எம்.சி ஸ்வாஹா)
இதுவல்லாது 4 அணைகளுக்கும் 11 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்கு ( கோடை மழை) இதையும் சேர்த்தா
பிப் 1 முதல் மே 14 க்குள்ளாகவே 41 டி.எம்.சி டி.எம்.சி தண்ணீரை ஸ்வாஹா செய்திருக்கிறது
தமிழ் நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை மட்டும் திறந்து விடவே இல்லை .மேட்டூர் அணைக்கு தண்ணிரை திறந்து விடாம பட்டை நாமம் சாத்தியிருக்கு . இதனால தமிழகத்துல
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுருச்சு -சம்பா சாகுபடியும் தாமதம் ஆகுது..
இதுக்கு என்னதான் தீர்வு?
காவிரி ஆயக்கட்டுல கர்னாடகம் 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல விவசாயத்தை விரிவு படுத்தக்கூடாதுன்னு கட்டாயப்படுத்தலாம். சேட்டிலைட் உதவியோட இதை கண்காணிக்கவும் முடியும். மத்திய அரசு முதுகெலும்பை கடன் வாங்கியாவது கர்னாடக அரசுக்கு மூக்கணாங்கயிறு போடலாம்.
ஆனால் பெருகி வரும் மக்கள் தொகை -உணவு தேவைய வச்சு பார்க்கும் போது - அந்த மானிலத்து விவசாயிகளோட வாழ்வாதாரங்களை இந்த முடிவு ஒழிச்சு கட்டிருங்கற கோணத்துல பார்க்கும் போது இது சுத்த பைத்தியக்காரத்தனம்.
பின்னே என்னதான் தீர்வு?
சம்பிரதாய நீர்பாசன முறைகளின் படி 11.20 லட்சம் ஏக்கருக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை மட்டும் கர்னாட அணைகளில் தேக்கிவச்சு, நியாயமா தமிழகத்துக்கு திறந்தி விட வேண்டிய தண்ணீரை திறந்துவிடலாம்.
இதுக்கு மன்சங்களை நம்பி புண்ணியமில்லை. அணைகளோட கேட்ஸை திறந்து மூடறதை ஆட்டோமேஷன் பண்ணியாகனும்.
அது சரி கர்னாடகத்துல 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்கும் நிலங்களுக்கு பாசனம் எப்படின்னு கேப்பிக. சொல்றேன்.
காவிரி ஆயக்கட்டுல சாகுபடி செய்யற விவசாயிகளுக்கு கர்னாடக அரசு பிவிசி பைப் லைன் மூலமாக மட்டுமே தண்ணீர் தரனும். விட்டா சொட்டு நீர் பாசனம் இருக்கவே இருக்கு. இதுக்கு ஆகக்கூடிய செலவை யார் ஏற்பதுன்னு ஒரு கேள்வி வரலாம்.
இந்த காவிரி பிரச்சினைய தீர்க்க போடப்பட்ட ட்ரிப்யூனல்,கமிட்டி ,மண்ணாங்கட்டியை எல்லாம் கடாசிட்டு அதுக்கு வருசா வருசம் ஆகக்கூடிய செலவை கர்னாடக அரசுக்கு ஒதுக்கலாம்.
பாராளுமன்றத்துல /தமிழக /கர்னாடக சட்டமன்றங்கள், மேலவைகள்ள வருசா வருசம் இந்த மேட்டர்ல நடந்த விவாதங்கள்,களேபரங்களுக்கு ஆன செலவை வெட்டி உபயோகிக்கலாம்.
இதே பிரச்சினையில தமிழக ,கர்னாடக காவல்துறை வருசா வருசம் செலவழிக்கிற தொகைகளை, மத்திய அரசு இந்த பிரச்சினையில சி.ஆர்.பி.எஃப் பி.எஸ்.எஃப் -ஐ ஈடுபடுத்திய போது ஆன ஆண்டு செலவுகளையும் இந்த வேலைக்கு திருப்பி விடலாம்.
காவிரி நதி நீர் ஆணையம் கடைசியா கூடினது 2003,பிப்ரவரி 10 லயாம் . கடந்த 9 ஆண்டுகளில் கூடவும் இல்லை ..பேசவும் இல்லையாம் . இது கூடினாலும் கலைஞ்சாலும் வெட்டிச்செலவு தான். தப்பித்தவறி இந்த தாட்டி கூடினா நாம தந்திருக்கிற இந்த ப்ரப்போசலை வச்சு டிபேட் பண்ணா காவிரி பிரச்சினையே ஃபணால். செய்வாய்ங்களா?
No comments:
Post a Comment