அண்ணே வணக்கம்ணே !
காதல் செழிக்கனும்னா காதலர்கள் நாறிரனும். நட்பு செழிக்கனும்னா நண்பர்கள் நலியனும். அதைப்போல ஜோதிடம் செழிக்கனும்னா ஜோதிடரும் -ஆர்வலரும் அலைக்கழியனும். ஆர்வலர் மீன்ஸ் சோசியம் கேட்கிறவரு.
1989, பிப்ரவரி முதல் 1990 மார்ச் வரை நாம பார்க்காத சோசியரில்லை.ஆனால் இன்னைக்கு ஆருனா சோசியரோட பயோடேட்டா தெரிஞ்சா ஒடனே ஒரு நடை போய் வந்துரலாமான்னு தோனுது. அந்த டெம்ப்டேஷன் இன்னம் அப்டியே கீது நைனா.
அதே போல நாம கேட்ட குண்டக்க மண்டக்க கேள்விகளால தொழிலை விட்டுட்டு காணாம போன சோசியர்களும் உண்டு. மேற்படி காலகட்டத்துல நாம மேல் மாடிக்கு கொடுத்த வேலை இருக்கே. ய..ப்பா.
ஒரு வகையில் நம்மை நாம கொன்னுக்கிட்டு -அந்த பீரியட்ல மாட்டின சோசியர்களை கொன்னுத்தேன்
ஜோதிடம்னங்கற கடல்லருந்து தம்மாத்தூண்டு தண்ணியை நம்ம டெஸ்ட் ட்யூப்ல சேகரிச்சம்.
இன்னைக்கும் சோசியர்களை பேதியாக்கற ரேஞ்சுக்கு கேள்விகள் நம்ம கிட்டே ஸ்டாக் உண்டு.ஆனால் போவட்டும் விடுன்னு விட்டு வச்சிருக்கம்.
ஏன்னா ஜோசியம் ஒரு ஆட்கொல்லி. ஸ்லோ பாய்சன் மாதிரி . (உஸ் அப்பாடா மேட்டருக்கு வந்தாச்சு தலைப்பையும் ஜஸ்டிஃபை பண்ணியாச்சு)
தலைப்பை பார்த்துட்டு அடடா நம்ம முருகேசன் கூட செல்ஃபிஷா திங்க் பண்ணி தன்னோட ஃபீல்டுல புதிய ஆட்களை அண்டவிடாம பண்ண பீலா விட ஆரம்பிச்சுட்டாருப்பான்னு நினைச்சிருப்பிங்க. லாஜிக்கு.ஆனால் இந்த பதிவுல நாம சொல்லப்போறதெல்லாம் அட்சர சத்தியம்.
எந்த தொழில்/உத்யோகம் செய்றவுகளை கேட்டாலும் " சீ சீ .. இந்த தொழிலுக்கா வேணாம்பா .. நானே எப்படி வெளிய வரலாம்"னு பார்த்துக்கிட்டிருக்கேம்பாய்ங்க.
இப்படி சொல்றவுகளை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம்.
1. நெஜமாலுமே நொந்து நூடுல்ஸாகி யான் பெற்ற துன்பம் பெறாதொழிக இவ்வையகம்ங்கற சைக்காலஜி
2. தாளி .. இருக்கிற போட்டியையே சமாளிக்க முடியலை இதுல இவன் வேறயான்னு கழட்டி விடறவுக.
ஆனால் நம்மை பொருத்தவரை 1989 முதல் ஜோதிடத்தை முக்கிய தொழிலாவும் செய்திருக்கம் - சைடாவும் வச்சிருந்திருக்கம் - சுத்தமா கழட்டியும் விட்டிருக்கம் -இந்த 3 நிலையிலருந்தும் பார்த்த பார்ட்டிங்கறதால மத்தவுக நினைச்சுக்கூட பார்க்காத சில விஷயம்லாம் நமக்கு அத்துப்படி.
பத்து இருபதுக்கு சோசியம் சொல்லிக்கிட்டு அல்லாடிக்கிட்டிருந்தப்ப கூட நம்மை சுத்தி ஒரு கூட்டமிருக்கும். (அதனால வரவா செலவா - லாபமா நட்டமாங்கறது அப்பாறம் கதை ) - சொசைட்டியோட அப்படி ஒரு நெருக்கம்.
இந்த ஆன்லைன் ஜோதிடம் சூடு பிடிச்ச பிறவு பயங்கர மொக்கை.
காலை எந்திரிச்சு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தா எந்திரிக்க மதியம் 1 ஆயிரும். டக்கோட்டா சன்னிய எடுத்துக்கிட்டு எலி மேல பிள்ளையார் கணக்கா அப்படியே ஒரு ரவுண்டு . ஃபைனான்ஸ் கலெக்சன் மாதிரி பத்து பன்னென்டு நமஸ்காரங்களை கலெக்ட் பண்ணிக்கிட்டு வீடு -சாப்பாடு -
உண்ட மயக்கத்தோட கம்ப்யூட்டர் முன்னாடி சின்ன ஃபாலோ அப். சந்திரபலம்,தாராபலம் எல்லாம் இருந்தா அஞ்சு வரை தூக்கம். மறுபடி 7 வரை கம்ப்யூட்டர்.
ஏழு மணிக்கு மேல பஸ் ஸ்டாண்ட். நம்மை மாதிரியே வாயிதா போன கேஸு எதுனா மாட்டினா ஃப்ளாஷ் பாக் பேசிட்டு ஒரு டீ,சிகரட்.
மறுபடி வீடு மறுபடி கம்ப்யூட்டர். இதுக்கப்பாறம் வண்டி ரெண்டு ரூட்ல ஓடும் . ஒன்னு விடியல் 3 அ 4 வரை ஒர்க் பண்ணிட்டா மறு நாள் காலை பத்து வரை தூக்கம். ரெம்ப சுஸ்தா இருந்து 11 க்கெல்லாம் தூங்கித்தொலைச்சுட்டா என்.டி.ஆர் கணக்கா விடியல் 3 க்கு முளிச்சி உட்கார்ந்து ஒர்க் அவுட் பண்றது .
இந்த லைஃப் ஸ்டைல்ல நாம இழந்தது வேட்டையாடும் திறன். ஐ சைட்டு, ஞாபக சக்தி , பப்ளிக் ரிலேஷன், மணி மேனேஜ்மென்ட்,டைம் மேனேஜ் மென்ட் இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை அனேகம்.
ஒரு 45 வயசு ஆசாமி ரொட்டீனா என்னெல்லாம் செய்வானோ அதெல்லாம் பந்த். இதுல சோகம் என்னடான்னா பத்து ரூபா கடன் வாங்கற கப்பாசிட்டி ,கடன் காரனுக்கு வாயிதா சொல்ற கப்பாசிட்டி கூட ஃபணாலாயிருச்சுங்கோ.
அதெல்லாம் பொண்ணு பார்த்துக்கிட நாம 45 க்கே 58 ஆசாமியா காலம் கழிக்க வேண்டியதாயிருச்சு. செக்கு மாடு ,கிணற்றுத்தவளை இப்படிப்பட்ட வரிசையில எத்தனை வார்த்தை இருக்கோ அத்தனையையும் போட்டுக்கலாம்.
இதுல நமக்கு கிடைச்சது என்னன்னு பார்த்தா நூறு இரு நூறுக்கு ஐந்தாண்டு திட்டம் தீட்ட தேவையில்லாத நிலை.
ஒரு ஜாதகத்தை எடுத்து வச்சுக்கிட்டு முன்னோட்டம் -கேள்விகளுக்கான பதில்கள் - தீயபலன்களை கட்டுப்படுத்த பரிகாரங்கள்னு பேசி பதிவு பண்ணி முடிக்கிறதுக்குள்ளாற பாடி காட்பாடி ஆயிருது. இது உடலளவிலான களைப்பு இல்லேங்கறது நெல்லா புரியுது. எதையோ இழக்கிறேன்.அது என்னன்னு புரியுது.
அதை எப்படி ரீஃபில் பண்றதுன்னு புரிய மாட்டேங்குது.
நாம பழைய பதிவுகள்ள பட்டியலிட்டிருந்த சாங்கியம்,சம்பிரதாயம்,சுலோகம்,ஜபம் இத்யாதியெல்லாம் தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கு. ஆனாலும் பஸ்ட் ஆயிட்ட லாரி ட்யூப் மாதிரி ஒரு ஃபீலிங். இது எந்தளவுக்கு போயிருச்சுன்னா ..
ஒரு நல்ல டீம் கிடைச்சு நம்ம பதிவுகளை இங்க்லீஷுக்கு ட்ரான்ஸ்லேட் பண்ண வச்சு, ப்ளாக்ல போஸ்ட் பண்ணி கொஞ்ச காலம் ப்ரமோட் பண்ணிட்டு ( பைசாவும் வருமாமே .. ஆட்சென்ஸு) சுத்த்மா கழண்டுக்கலாமான்னு கூட தோணுது.
எனக்குள்ள இருந்த வேக்குவம் எல்லாத்தையும் இழந்துட்டாப்ல ஒரு ஃபீலிங். இனி கதை எழுதி - சினிமாவுக்கு கொடுத்து -டைரக்டராகி - அரசியலுக்கு வந்து - நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியாகி.. ஊஹூம் .. ரெம்ப டயர்டு.
பழைய வேக்குவம் திரும்பி வரனும்னா ஒரு 6 மாசத்துக்கு லீவு போட்டுட்டு நெல்ல புஸ்தவங்க படிக்கனும் - நெல்ல சினிமாங்க பார்க்கனும் - நாம நாறிக்கிடந்தப்பயே இவன் நல்லா வ்ரணும்யா நினைச்ச ஆத்மாக்களை ஒரு தாட்டி சந்திக்கனும். இப்படி என்னென்னமோ பண்ணனும்.
இதெல்லாம் ஏதோ ஒரே வேலைய மறுபடி மறுபடி பண்ணதால வந்த மன நிலைன்னு நினைச்சா அது தப்பு. ஒவ்வொரு ஜாதகத்தை கையில் எடுக்கிறச்சயும் ஒரு தாட்டி பிறக்கிறோம். அந்த ஜாதகத்துல பிறந்தவரை விட நமக்கு அந்த ஜாதகத்தின் பேரில் அதிக அக்கறை வந்துருது. ஒவ்வொரு ஜாதகத்துக்கும் பலன் சொல்லி அந்த ஜாதகர் 80 சதம் டாலி ஆச்சு ,60 சதம் டாலி ஆச்சுன்னு ஃபீட் பேக் கொடுக்கிறவரை வாழ்வா சாவாதான்.
ஆனாலும் எதையோ இழந்துர்ரன். இழந்துக்கிட்டே இருக்கன். அது என்னனு புரியலை.அதை எப்படி ரீஃபில் பண்றதுன்னும் புரியலை.
இத்தனைக்கும் அதிகப்படியா வர்ர பைசால இருந்து அதிகப்படியா ஒரு சிகரட் கூட குடிக்கிறதில்லை. ப்ராண்டை கூட மாத்தலை. பேண்ட்டுக்குன்னா இரு நூற்று சில்லறை ,டீ ஷர்ட்டுக்குன்னா 75 ஷர்ட்டுக்குன்னா ரூ.100 க்கு மேல செலவழிக்கிறதே இல்லை. நோ ப்ரேக் ஃபாஸ்ட், நோ கம்பெனி ட்ரிங்க்ஸ், நோ பேக்கரி, நோ ஃபாஸ்ட் ஃபுட்...
இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா நம்முது பயங்கர யோக ஜாதகம் - 14 வருசம் வன வாசம் - அதுல உரமேறின மனசு - சதா சர்வ காலம் ஒரு ட்ராக்ல ஆன்மீகம் ஓடிக்கிட்டே இருக்கு. இத்தனை இருந்தும் எதையோ இழந்துட்டாப்ல ஒரு ஃபீலிங். இழந்ததை எப்படியாவது ரீஃபில் பண்ணனுங்கற வெறி.
சோசியத்தை வாசம் பார்த்துட்டு ஊரை ஏமாத்தினா கூட டேமேஜ் குறைவு தான். தோல் வியாதி வ்ரும் அ விரை வாதம் அ கீல் வாதம்.
ஆனால் சோசியத்தை ஒழுங்கா கத்துக்கிட்டு நாலு பேருக்கு சொன்னா -அதுவும் கரீட்டா சொல்லி தொலைச்சா - அதுலயும் சொன்னது நடந்து தொலைச்சா ஆருக்கோ கோவம் வருதுங்ணா. அந்த கோவம் அல்ட் ரா வயலட் ரேஸ் மாதிரி மண்டைய குடையுதுங்ணா..
நாம நம்ம அனுபவத்துலருந்து சொல்றது இன்னாடான்னா இந்த டிப்பார்ட்மென்டே மானாம் தலை .. தப்பி தவறி பிலோ ஆவரேஜ் ஜாதகத்துல பிறந்து -சராசரியா வாழ்ந்து - இந்த கலைய கத்துக்கிட்டு ப்ராக்டிஸ் பண்ணா மட்டும் பல்பே தான்.பல்பை தவிர வேறில்லை.
எச்சரிக்கை:
அனுபவஜோதிடம் டாட் காமோட ரேங்கு 2012 பிப்ரவரியில கூட 25 ஆயிரத்துக்குள்ள இருந்தது. ஜோதிடம் 360 வெளியவர்ரதுக்குள்ள 1 லட்சத்தை தொட்டுருச்சு. இன்னைக்கும் அந்த ரேஞ்சை விட்டு இறங்க மாட்டேங்குது.
ஆனாலும் இதுல ஒரு நன்மையும் இருக்கு. 3 மாசமாகியும் பிக் அப் ஆகாத ரேங்கை இனி பிக் அப் பண்ணா என்ன பண்ணாட்டா என்னன்னு மொக்கைப்பதிவுகளா போட்டுக்கிட்டிருக்கேன்.(அதாவது யூஸ்ஃபுல் போஸ்ட்ஸ்) இது சேம் சைட் கோல் மாதிரியா?
அல்லது தற்கொலைத்தனமா சனத்துக்கு உண்மைய சொல்லி கடவுளுக்கு ஐஸ் வைக்கிற முயற்சியா? புரியலை ..
குறிப்பு: ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் நாளை முதல் தொடரும். என்னைக்கோ ஒரு நாள் ப்ளாக்,சைட் எல்லாத்தையும் திராட்ல விட்டுட்டு ஃபேஸ்புக்ல மட்டும் எளுத ஆரம்பிச்சுருவம். அதுக்குள்ளாற நம்ம முக நூல் பக்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சு -ஒரு லைக் போட்டு - கர்சீஃப் போட்டு வச்சிருங்கண்ணா..
No comments:
Post a Comment