'>

Friday, May 17, 2019

ஆறில் இருந்து அறுபது வரை :தேவதைகளுக்கு யாகங்கள்


அண்ணே வணக்கம்ணே !

பழைய நன்னி விசுவாசத்துல இந்த ப்ளாக் வழியா  நம்மை அறிந்த சனத்தை திராட்டுல விட்டுரக் கூடாதுங்கற அக்கறையில ஆறில் இருந்து அறுபது வரை நூலின் அத்யாயங்கள் பலவற்றை இங்கே கொடுத்தன்.

அடுத்தடுத்த அத்யாயங்கள் நம்ம அனுபவஜோதிடம் வெப்சைட்ல பிரசுரமாகும்.

சிரமத்துக்கு வருந்துகிறேன்.

தேவதைகளுக்கு யாகங்கள் :
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும். (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ - அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். உ.ம் பட்டாடைகளுக்குச் சுக்கிரன் அதிபதி.
லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். உ.ம் செவ்வாய் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்திஸ்தானம் - செவ்வாய்க்குரிய கடவுள் சுப்ரமணியர் - சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப் பாருங்கள்!
செவ்வாய் 2டிலோ - 8டிலோ - 12டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம் - தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம். காரணம் 2 என்பது தனபாவம் - செவ்வாய் நெருப்புக்கு அதிபதி - ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன். 8 என்பது ஆயுள்பாவம்பெரு நஷ்டங்களைக் காட்டும் இடம் – 12 என்பது விரயபாவம் - நஷ்டங்களைக் காட்டும் இடம் - இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன். யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன் வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித் தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குரு கிரகத்தின் தோஷம் குறையும்.



No comments: