'>

Saturday, May 4, 2019

ஆறில் இருந்து அறுபது வரை (இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை)


அண்ணே வணக்கம்ணே !

வேர்களை மறந்த மரங்கள் விரைவில் சாயும்னு சொல்லுவாங்க. அனுபவஜோதிடம் டாட் காம்ங்கற மரத்துக்கு இந்த வலைப்பூ தான் வேர்.
ஆகவே நன்றி மறவாம நாம அச்சு நூலா வெளியிட்ட ஆறில் இருந்து அறுபது வரை நூலின் எல்லா அத்யாயங்களையும் இங்கே தொடரா வெளியிட முடிவு பண்ணியிருக்கன். படிங்க..ஷேர் பண்ணுங்க என் ஜாய் பண்ணுங்க
(எச்சரிக்கை: பதிவுகளை படிச்சு உ.வ பட்டு உடனே ஜாதகத்தை அனுப்பிராதிங்க. ஜூன் 7 ஆம் தேதி வரை ஹவுஸ் ஃபுல்லுங்கோ )





சமீபத்தில் புத்தக கண்காட்சியை ஒட்டி சன் நியூசில் ஏதோ விவாத நிகழ்ச்சி. அதில் பதிப்பாளர் ஒருவர் எழுத்தாளர்கள் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. நூல் பதிப்பில் இறங்குவது நல்லதல்ல என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இன்றைய கால கட்டத்தில் எழுதுவது என்றால் கம்ப்யூட்டரில் தட்டச்சுவது தானே. தட்டச்சுவது என்னவோ எளிதுதான். அதிலும் சரியான பாய்ண்ட் ஸ்பார்க் ஆகிநல்ல ஃப்ளோவில் போகும் போது எழுதுவதற்கும்தட்டச்சுவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. தட்டச்சுவதைஅலைன்செய்வது ஒரு இம்சை. கம்ப்யூட்டரிலேயே படித்து டிங்கரிங் செய்வது ஒரு இம்சை.
ப்ரிண்ட் அவுட் எடுத்து கரெக்சன் பார்ப்பதும் அதே ரேஞ்சு தான். கூடுதலாக பைசா கொஞ்சம் செலவு என்பது உபரி இம்சை. கடந்த முறை 4 நூல்களை ஒரே சமயத்தில் வெளியிட்ட போது கூட இந்த அளவுக்கு டெப்ரஸ் ஆனதில்லை. இன்னும் சொல்லப் போனால் புருஷனை பார்த்து தாலியை தேடும் கதையாகத்தான் அது ஆரம்பித்தது. ஆனால் சொல்லி வைத்தாற் போல் யாவும் நல்ல படி நடந்து முடிந்தன.
அந்த நூல்களை வெளியிடுவதற்காக ஒரு நாள் ஒரே ஒரு நாள் கூட நான் என் வேலைகளை ஒத்திப் போட வேண்டி வரவே இல்லை. ஆனால் இந்த முறை ஓப்பனிங் பிரம்மாண்டம். ரிலீஸ் தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே டிடிபி ஆப்பரேட்டருக்கு அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது. அவருக்கு சந்தர்ப்பம் கூடி வரவில்லை. நல்ல வேளையாக உடைத்து சொல்லி விட்டார். பிறகு இருக்கவே இருக்கிறது முக நூல். 5 ஆயிரம் நண்பர்கள் இருக்கையில் என்ன பயம் என்று ஒரு பதிவு போட்டேன்.
பிரபல எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் டிடிபிக்கு ஒருவரையும்அச்சிடுவதற்கு ஒருவரையும் ரெஃபர் செய்தார். அப்பாடா தீர்ந்தது பிரச்சினை என்று இருவருக்கும் காசு போட்டாகி விட்டது. பிறகு தான் விதி விளையாட ஆரம்பித்தது.
புத்தக ரிலீஸ் தேதி 2017 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை என்று அறிவிக்கப்பட்டு ஜன.14 க்கு தள்ளி வைக்கப்பட்டதை  நினைவில் கொள்ளவும். தமிழ் சினிமா க்ளைமேக்ஸுக்கு குறைவாக ஏதும் நடக்கவில்லை. ட்விஸ்ட்சடன் ட்விஸ்ட் இப்படி தொடர் கதை தான்.
டிசம்.31 ஆம் தேதிக்கு ஒரு வழியா ட்ராஃப்ட் ரெடி ஆச்சுது. ஐ மீன் யுனிகோட்ல அடிச்சு டாக்குமென்ட் ரெடி. ஆப்பரேட்டருக்கு மெயிலும் அனுப்பிட்டன். நமக்குத்தான் 9ல் சனேஸ்வரர் இருக்காரே ஜாதகத்துல (டவுட்டிங் தாமஸ்). வீட்டுக்கு வந்ததும் அன்னாருக்கு வாட்சப் பண்ணேன்.
பாஸ்! இன்னொருக்கா பார்த்துட்டு சொல்றேன். பிறகு வேலையை ஆரம்பிங்கன்னு வாட்சப் பண்ணிட்டு ட்ராஃப்டை பட்டி பார்க்க ஆரம்பிச்சேன்.
நாம ரெண்டாவது வெர்சன் அனுப்பறதுக்குள்ள ஆப்பரேட்டர் கோதாவுல இறங்கி மேட்டரையே முடிச்சுட்டார். அவ்வ். எப்படியோ ரெண்டு வெர்சனையும் ஒரே ஃபார்முக்கு கொண்டு வந்தேன். ப்ரூஃபும் பார்த்து அனுப்பிட்டன்.
ப்ரிண்டர் கொடுத்த அதே சைஸ் வச்சு தான் நான் மேட்டர் ரெடி பண்ணியிருக்கன். ஆனால் பாருங்க ஆப்பரேட்டர் மேட்டர் போறாது, இத்தனை பக்கம் மேட்டர் வேணம் / மேட்டர் போறாது, இத்தனை பக்கம் மேட்டர் வேணம்னு ரெண்டு முறை கேட்டு வாங்கினாரு.
கம்யூனிகேஷன்ல நம்முது வெஸ்டர்ன் ஸ்டைல். ஒதகாத மேட்டரா இருந்தாலும் மார்வலஸ் / ஃபென்டாஸ்டிக்னு தூக்குவன். நம்ம பக்கம் சின்ன தப்பு நடந்திருந்தாலும் எக்ஸ்ட்ரீம்லி சாரி / சாரி ஃபார் தி ட்ரபுள்னு அடிச்சு விடுவன்.
ஆப்பரேட்டர் நம்ம வே ஆஃப் கம்யூனிகேஷன வச்சு இவன் கில்ட்டில இருக்கான். பத்து ரூவா கூட பார்த்துர வேண்டியதுதான்னு இன்டென்ட் போட்டார். கொட்டுவாய்ல ஆள மாத்த முடியாத குறைக்கு ஓஞ்சு போன்னு அன்னார் கேட்ட உபரி தொகையையும் செலுத்தியாச்சு.
அதுக்கு பிறவு அன்னார் செய்தது பச்சை துரோகம். அப்படியே லெட்டர் ப்ரஸ்ல செய்த கணக்கா படு மொக்கையான லே அவுட். ஆங்காங்கே அருவறுப்பா காலியிடம் வேற. செம காண்டாயிட்டேன்.
ஒரு வழியா அன்னார் அனுப்பின பிடிஎஃப் ஃபைலை இமேஜ் ஃபைலாக்கி அதை மவ கிட்ட கொடுத்து இமேஜ் எடிட்டிங் செய்து (இதுல சிக்கல் என்னடான்னா ப்ரூஃப்லாம் திருத்த முடியாது. பாரா பாராவா தூக்கலாம், சேர்க்கலாம். அம்புட்டுதேன். கடந்த பதிவில் எழுத்து பிழைகள் மலிந்திருக்க காரணம் இதுவே. சரி ஆப்பரேட்டர் தான் ஆப்படிச்சுட்டாரு. ப்ரிண்டராச்சும் ஆப்பை எடுத்து விட்டு கொஞ்சம் மருந்து போடுவாருன்னு அவருக்கு ஃபோன் போட்டேன்.
ஊருக்கு முன்னே காசெல்லாம் கணக்குல போட்டு செட்டில்டுங்கறதால நம்மை மறந்தே பூட்டாங்க போல. சடக்குனு சுதாரிச்சுக்கிட்டு என்னங்க மேட்டர் எப்ப தரேன்னிங்க. இப்ப தரிங்க. செல்லாது செல்லாதுன்னு கட்டைய போட்டாச்சு. அப்படி இப்படி கோஞ்ஜாடிஅய்யா சாமீ! ஜன.14 ரிலீஸுன்னு ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சாச்சுய்யா. ஏற்கனவே தள்ளி வச்ச தேதி தான்யா. கொஞ்சம் பார்த்து செய்ங்கய்யா. ஒரே ஒரு புக் அடிச்சு அனுப்புங்கய்யா. நான் ஃபேஸ்புக்ல செல்ஃபி போட்டு சமாளிச்சுக்கறேன்னுட்டு ஒரு சமரச தீர்வு.
எட்டு புஸ்தவம் அனுப்பினாய்ங்க. இதுல ஒரு வில்லங்கம் என்னடான்னா மொத்தமே தலா 80 பக்கம் தான் ப்ரிண்ட் ஆகியிருக்கு. என்னங்க ஆச்சுன்னா டவுன்லோட் பண்ணவர் மிஸ் பண்ணீட்டாராம். அப்படியும் கடுப்பாகாம பொறுமையா பேசி புஸ்தவம் அடிச்சு வாங்கி - அவிக ரெகுலரா போடற பார்சல் சர்வீஸுக்கு சித்தூர்ல கிளை கிடையாது. சரி ஒழியட்டும் வேலூருக்கே போடுங்க. நேர்ல வாங்கிக்கறேன்னு பஞ்சாயத்தை முடிச்சேன். மொத பதிப்பை தான் சொதப்பி தொலைச்சுட்டம். அடுத்த பதிப்பையாவது பக்காவா செய்யலாம்னு இதோ இந்த இரண்டாம் பதிப்புக்கான கன்டென்ட்ஐ அந்தாசா திருத்தி அடிச்சு முடிச்சிருக்கன்.
2018 ஆம் ஆண்டின், பிப்.18 ஆம் தினத்து காலை நேரம்.

 


No comments: