அண்ணே வணக்கம்ணே !
அம்ம எவரிக்கைனா அம்மே ..ரஜினி காந்த் நடிச்ச அன்னை ஓர் ஆலயம் படத்துக்கு தெலுங்குல இந்த பேரத்தான் வச்சிருந்தாய்ங்க. "அம்மா யாருக்கும் அம்மாதானே"ங்கறது இதனோட அருத்தம்.
சில மாசங்களுக்கு மிந்தி அம்மான்னு அடிச்சு தேடி நொந்து எழுதினதை படிச்சிருப்பிங்கனு நம்பறேன். மறுபடி சந்திரன் ஒரு ரவுண்டு முடிச்சுட்டாரோ என்னமோ இன்னைக்கு மறுபடி அம்மான்னு தேடினேன். நோக்கம் கவுரதையான லிங்க் எத்தனையாவது பேஜ்ல வருதுன்னு பார்க்கிறது. ஊஹூம்.. எல்லாமே உவ்வேதான்.
எப்படியோ இந்த தேடல் அம்மா பற்றிய ஞா கிளறிவிட்டுருச்சு. வயசாயிருச்சா -லைஃப்ல வேற ஒரு 16 வருசம் நாயடியா ..பொத்தி பாதுகாக்க வேண்டிய நிறைய நினைவுகள் எகிறிப்போச்சு.அல்லது தேசலாத்தான் ஞா வருது. ரெம்ப வருத்தமாயிருச்சு.
கு.பட்சம் ஆத்தோட போயி அன்று முதல் இன்று வரை -ஸ்திர வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கிற நம்ம சொந்த பந்தம் /அவிகளோட வாரிசுகள் ஆருனா முக நூல்ல டச் ஆனா அம்மாவோட அசலான - ஃபோட்டோ ஷாப் தீற்றல்கள் இல்லாத உயிர் உள்ள ஃபோட்டோக்கள் எதுனா கிடைக்குமான்னு கூட ஒரு நப்பாசை வந்துருச்சு.
நம்மை நாமே கடிஞ்சுகிட்டு கம்ப்யூட்டரை ஷட் டவுன் பண்ணிட்டு கண் மூடி யோசனை. அம்மா சம்பந்த பட்ட விஷயங்களை பிடிவாதமா ஞா படுத்திக்க ட்ரை பண்ணேன். ஊஹூம்.ஒன்னும் பேரலை.
சரி பிழைப்பையாவது பார்ப்போம்னு மறுபடி கம்ப்யூட்டரை ஆன் பண்ணேன். படக்குன்னு புத்தி மாறி போச்சு.
எதுனா தமிழ்சங்கங்கள் கிடைச்சா சொம்படிச்சு கூட்டம் கீட்டம் பேசி பெரியாளாயிரனும்ங்கற கெட்ட எண்ணத்தோட இன்னைக்கு அகாலமா கூகுல் சர்ச்ல தமிழ் சங்கம்னு அடிச்சு தேடினேன். (பெரியாளாயிட்டா விட்டுப்போன சொந்த பந்தம்+அம்மா நினைவுகள் திரும்பி வந்துரும்ங்கற எண்ணமும் அதுல அடக்கம்)
அம்மாவுக்காக துவங்கின தேடல் ஒரு யூனிவர்சல் அம்மாவை தேடி தந்துருச்சு. கொய்யால எல்லா பையனும் அம்மாவை பத்தி இப்படித்தான் ரோசிப்பான் போல. ( காதல்லயும் இதே முட்டாள் தனமிருக்கு. எல்லா காதலும் ஒரு இழவுதான் .ஆனால் ஒவ்வொருத்தனும் என் காதலி மாதிரி எவள் உண்டும்பான். ஃபோபியா? )
இப்படி அம்மா அம்மான்னு மாஞ்சு மாஞ்சு எழுதிக்கிட்டிருக்கிற நாம தமிழ் சினிமால அம்மா சென்டிமென்டை ஏகத்துக்கு நக்கல் அடிச்ச பார்ட்டி.. ஆத்தா லைன் அப் கிடைச்ச பிற்காடுதேன் ஒரிஜினல் அம்மாவை ரோசிக்க ஆரம்பிச்சேன்னு கட்டாயம் சொல்லியாகனும்.
.
நல்ல வேளையா நாம சீப்படறதை பார்க்கறதுக்கு மிந்தியே சொகம்மா கொண்டு போயிட்ட கான்சருக்கு இப்பம் நன்றி சொல்லலாமான்னு கூட தோனிருச்சு.
1967 ல பிறந்த நமக்கு 1984 ல என்னா வயசு இருக்குங்கறிங்க? அந்த வயசுல வேலூர் சி.எம்.சில ஒரு கான்சர் பேஷண்டுக்கு கேர் டேக்கரா இருக்கிறது எப்டினு தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியமில்லைன்னு இப்பவும் நினைக்கிறேன்.
தம்பியும் நானும் தான் மாறி மாறி இருப்போம். அவன் அந்த பீரியட்லயே அம்மாவோட ஆஸ்பத்திரி தலையணை கீழ இருந்து காசெல்லாம் திருடுவான். வீட்ல கூட அப்பா எதையாச்சும் வாங்கி வரச்சொன்னா சில்லறை தரமாட்டான். ( இதுக்கெல்லாம் டபுளா பிற்காலத்துல நாம ஆரம்பிச்சுட்டது வேற கதை .)
நேரத்தை கொல்ல இந்த பாக்கெட் நாவலுங்க தான் கொண்டு போவேன். ஒரு நா அம்மா அப்பா கிட்டே சொன்னாய்ங்க " இவனை அனுப்பாதிங்க ..வெத்தா புஸ்தவம் படிச்சிக்கிட்டிருக்கான்" இந்த ஒரு பாய்ண்ட் மேல பயங்கர கடுப்பாகி லிஸ்ட்லருந்து கழட்டி விட்டாச்சு.
அங்கன இருந்து 16 வருசம்.. அடிப்பட்டா கூட "அம்மா"ங்கற அலறல் வராது. "ங்கொம்மாள"ங்கற வசவு தான் வாய்ல வரும்னா பார்த்துக்கங்க. அதுக்கப்பாறம் தேன் ஆத்தாவோட லைன் அப்.
சரி யூனிவர்சல் அம்மாவை பிடிச்சேன்னியே எங்கய்யாம்பிங்க. கீழே தந்திருக்கன் பாருங்க.
( நன்றி:http://blog.richmondtamilsangam.org/2009/09/blog-post_14.html) இவரும் பெயர் மறந்த ஆரோ ஒருத்தருக்கு நன்றி சொல்லியிருக்காரு.
//அம்மா காட்டிய நிலாவும்,
அம்மா ஊட்டிய சோறும்
என்றுமே ஒருபடி உசத்திதான்.//
நிலா காட்டினதெல்லாம் ஞா இல்லை. சோறு ஊட்டினது? ஊஹூம்.. கையில உருட்டி போட்டது உண்டு.
//யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை,
என் தம்பி மட்டும் விதிவிலக்கு.//
அந்த ஆஸ்பத்திரி மேட்டர் தவிர இது நமக்கு பொருந்தாது. ஒரு வீட்லயே நாமதேன் வி.ஐ.பி.
//எனக்கு பிகாஸோவெல்லாம் தெரியாது
மார்கழி மாதக் காலைகளில்
அம்மா போடும் கோலங்கள்தான் தெரியும்.//
கோலம் பத்தின ரசனைல்லாம் அப்பம் கிடையாது.ஆனா பனி விழும் இரவில் தெருவே விழித்திருப்பதை பார்ப்பதில் ஒரு இது இருந்தது உண்டு.
//நவராத்திரியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அப்போதுதான் அம்மா அடிக்கடி பாடுவாள்.//
இது நச்சுன்னு பொருந்துது.
//அம்மா கோணலாய் இட்ட விபூதிக் கீற்றில்தான்
என் முகம் அழகாய்த் தெரிகிறது.//
ஊஹூம் இது அப்பா டிப்பார்ட்மென்ட்.பூஜையில இருக்கிறச்ச பட்டையடிச்சு விடுவாரு.
//என் பரிட்சைகளுக்காக என்னிலும் அதிகமாய்
தூக்கம் தொலைத்தவள் அம்மா.//
தூக்கம் தொலைச்சதெல்லாம் இல்லை. பகல்ல விளையாட போயிர்ரம்னு பெரிய ஃப்ளாஸ்க் நிறைய டீ போட்டு பூஜை ரூம்ல விட்டுருவாய்ங்க. டீ தீர்ர வரை படிச்சிருக்கம்.
//சிகப்பு நிற சேலைகள் அனைத்தும் அழகானவை
அம்மாவிடம் அவை நிறைய உண்டு.//
ஊஹூம்.. ஹைதராபாத் காட்டன் புடவைகள் ஞா இருக்கு. பட்டுப்புடவை? நிறம்லாம் ஞா இல்லை.ஆனால் அம்மா காலடியில உட்கார்ந்து கொசுவம்லாம் தீட்டி விட்டது ஞா வருது..
//நான் வேற்றூரிலிருந்து வருகையில்
'வாடா' என்று அழைக்கும் போது
கண்கள் பனிக்கும் போதே தெரியும்
எனக்காக காத்திருந்திருக்கிறாள் என்று.//
இந்த யோகம்லாம் நமக்கில்லிங்ணா.. ஒரு தாட்டி பல் தேய்க்காம டிஃபன் தின்னதுக்கு அண்ணன் திட்ட பஸ்ஸுல வேலூர் போயி - நடந்து வந்த சமயம் இப்படி ஒரு சீன் இருந்திருக்கலாம்.
//அம்மா கோவிலுக்குப் போய் சாமி பார்ப்பாள்.
நான் வீட்டிலிருந்து அம்மா பார்ப்பேன்.
இரண்டிற்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசமில்லை.//
இதெல்லாம் ஓவரு..
//எல்லா குஞ்சுக்கும் தன் காக்கை
பொன் காக்கை.//
கரீட்டு..
No comments:
Post a Comment