'>

Monday, May 6, 2019

ஆறில் இருந்து அறுபது வரை ( எச்சரிக்கை )



அண்ணே வணக்கம்ணே !
அச்சு நூலாக வெளி வந்து  பட்டைய கிளப்பிய ஜோதிடம் ,மனவியல் பாலியல் கூறுகளின் மகாவெடிப்பு “ ஆறில் இருந்து அறுபது வரை “320 பக்க  நூலின் அத்யாயங்கள் தொடர்பதிவுகளாக.
(இந்த தொடர்பதிவுகளின் மதிப்பு ரூ.300 என்பதை கவனத்தில் கொண்டு படித்து பயன் பெறுங்கள் . Pl share and spread )


 எச்சரிக்கை:
கவிதை என்றாலே நம்மவர்களுக்கு மைன்ட் ப்ளாக் ஆகிவிடும். எனவே சக ஜோதிடர்களுக்கும் ஜோதிட மாணவர்களுக்கும் ஜோதிட ஆர்வலர்களுக்கும் நான் சொல்ல நினைப்பதை ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி விடுகிறேன்.

பிறவாமை என்ற பெருவரத்தை பெறத்தான் - பூர்வ கருமங்களை தொலைக்கத்தான் இங்கே வந்திருக்கம். அதுக்கேத்த வாழ்க்கை - அந்த வாழ்க்கை அமைவதற்கு ஏற்ற கிரக ஸ்திதிகள் வர சிலர் பல்லாயிரம் ஆண்டுகள் கூட ஆன்ம வடிவில் காத்திருந்து தான் இந்த பிறவியை எடுத்திருக்கிறோம்.
பெயர் – புகழ் - பொன் - பொருள் - எவ்ள கிடைக்குதோ அந்தளவுக்கு ஆயுள் குறையும். கருமம் கூடும் அல்லது பூர்வ புண்ணியம் கழிஞ்சு போயிரும். அவப்பெயர் - வறுமை - நிராகரிப்புகள் எந்தளவுக்கு கிடைக்குதோ அந்தளவுக்கு பூர்வ கருமம் கழியும். பூர்வ புண்ணியம் அப்படியே இருக்கும்.
எம்.ஜி.ஆர் பட வசனம் போல நீதி – நேர்மை நியாயம்லாம் பின்பற்றி ஈட்டும் பொன் பொருளே நம் ஆயுளை குறைக்கும் -கருமத்தை கூட்டும் - பூர்வ புண்ணியத்தை குறைக்குமென்ற நிலையில் கூட்டி கொடுத்தும் - காட்டி கொடுத்தும் பெறும் பொன் பொருள் என்னெல்லாம் செய்யும்? யோசிங்க.
வே.விக்கள் கூறும் பிரம்மம் தன்னை இந்த பிரம்மாண்ட படைப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த படைப்பின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடும் போது நாம் எம்மாத்திரம். இந்த படைப்பில் இருந்து நம்மை வேறுபடுத்தி பார்த்துக் கொள்வதும் நம்மை மையமாக வைத்தே அனைத்தையும் சிந்திப்பதும் செயலாற்றுவதும் எப்பேர்ப்பட்ட மடமை ?
தந்தையிடமிருந்து விடுபட்டு - தாயின் முட்டை கருவை துளைத்த கணம் முதலே நம்மில் வளர்சிதை மாற்றம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. அஃதாவது வடிவேலு காமெடி போல செத்து செத்து விளையாட ஆரம்பித்து விட்டோம். மரணம் என்பது நம்மை துரத்தி கொண்டே இருக்கிறது.
இதனால் இருட்டு – பசி - தனிமை - வறுமை – தூரம் -நிராகரிப்பு இப்படி சின்னச் சின்ன விஷயங்களையும் சப் - கான்ஷியஸாய் மரணத்தோடு முடிச்சிட்டு இவற்றில் இருந்து தப்ப துணை – காதல் - செக்ஸ் உதவும் என்று இவற்றிற்காகவும் / செக்ஸ் ஏறக்குறைய  தடை செய்யப்பட்டிருப்பதால் இதற்கு மாற்றாய் பணத்தை உருவகித்துக் கொண்டு பணத்தை துரத்திய படி வாழ்வின் வெற்றி தோல்விகளை பணம் ஒன்றால் மட்டுமே அளவிட்ட படி கருமங்களை கூட்டி - பூர்வ புண்ணியங்களை எல்லாம் இழந்து மீண்டும் பிறவிச் சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். இதை விட முட்டாள்தனம் வேறேதும் உண்டா?
இவற்றை எல்லாம் உணர்ந்து நம் விதியை நாம் தெரிந்து கொண்டு விதி வகுத்த பாதையில் பயணிக்க வேண்டும் என்ற சங்கல்ப்பம் உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் உங்கள் மீது சொரிய ஆரம்பித்துவிடும்.
எதிர்காலம் தரிசனமளிக்கும். உங்கள் வாழ்வை உங்கள் விதிப்படி அமைத்துக் கொள்ளலாம். பூர்வ புண்ணியங்களை விரயமாக்கி விடாமல் – பூர்வ கருமங்களை எல்லாம் ஒழித்து பிறவாமை என்ற பெருவரத்தை பெற்று விடலாம்.
அவ்வாறன்றி ஒரு வேலைவாய்ப்பு - ஒரு திருமணம் -சொந்த வீடு - லக்சரி கார் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் ஜோதிடத்தை அணுகினால் அது கண்ணாமூச்சி காட்ட ஆரம்பித்துவிடும். அப்படியே அவை கிடைத்தாலும் ஜெவுக்கு கிடைத்த ஐஸ்கிரீம் சாக்லெட் கணக்காய் சிறுக கொல்லும்.


No comments: