அண்ணே வணக்கம்ணே !
வெட்டி .............. நித்திரைக்கு கேடுன்னு ஒரு சொலவடை உண்டு . இதுக்கு என்ன அருத்தம்னு அவ்வப்போது ரோசிக்கிறதுண்டு.
கர்பத்துக்கு வாய்ப்பில்லாத உடலுறவா? அல்லது பெண்ணுக்கு உச்சம் கிடைக்காத உடலுறவா? ஒரு வேளை எதையேனும் விரும்பி உறவுக்கு இடம் தர விரும்பியது கிடைக்காத உடலுறவா? ஒரு வேளை இதை சொன்னவள் பாலியல் தொழிலாளியா? கடங்காரன் எவனாச்சும் கடனை கழிச்சுட்டு போயிட்டானா? அல்லது கடன் சொல்லிட்டு போயிட்டானா?
மேற்படி உடலுறவு மட்டுமில்லை. ஒவ்வொரு வாழ்க்கையுமே வெ.ஓ தானோன்னு தோனுது .பெரியார் அவாளோட ஆதிக்கத்தை ஒழிச்சு கட்ட ஒரு அமைப்பை துவக்கறாரு .அவரோட ஸ்கூல்ல பால பாடமே கடவுள் இல்லேங்கறது.ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன்ங்கற அண்ணா துரை அந்த அமைப்பை ஹைஜாக் பண்ணி கொண்டு போறாரு.
அண்ணா தன் அரசியல் வாழ்வில் எந்த கட்டத்திலும் தன் குடும்பத்தாரை முன்னிலை படுத்தினதில்ல.ஆனால் அந்த கட்சி கலைஞர் கைக்கு போகுது . கலைஞரை வாழும் பெரியார்னு சொம்படிக்கிறவிக அடிக்கட்டும்.ஆனால் மஞ்சள் துண்டை மீறியும் பெரியாரின் கூறுகள் அவரில் உண்டு.அது வேற சப்ஜெக்ட்.
அப்படியா கொத்த கலைஞர் தலைமையில இருக்கிற கட்சியில ஒரு பெரும்பாகத்தை எம்.ஜி.ஆர் ஹைஜாக் பண்ணிக்கிட்டு போறாரு . மூகாம்பிகை தரிசனம் ,மணியன் இத்யாதி அவா கைப்பாவையா மாறிர்ராரு.
இதை எல்லாம் மீறியும் எம்.ஜி.ஆரிடம் ஒரு வித ராபின் ஹுட் தனம் உண்டு . ஆனால் கட்சி ஆரு கைக்கு போச்சு? அக்கிரகாரத்து அம்மையார் கைக்கு போயிருச்சு.
ஆக பெரியார்,அண்ணா,கலைஞர்,எம்.ஜி.ஆரோட உழைப்பெல்லாமே வெட்டியாதானே போச்சு மத்தவிகளாச்சும் போய் சேர்ந்துட்டாய்ங்க.கலைஞரை பாருங்க.
இன்னைக்கும் செவிடர் ராஜாங்கத்து அரசவை புலவர் கணக்கா தினசரி அறிக்கை பாட்டு பாடிக்கிட்டே இருக்காரு .
தனிப்பட்ட வாழ்க்கையே வெட்டி. லட்சிய வாழ்க்கை அதை விட வெட்டி . லட்சியத்தோட அரசு அதிகாரம் சேரும்போது அது அதைவிட வெட்டி .ஆனாலும் வாழ்ந்துக்கிட்டு தானே இருக்கம்.
சுபவீ வேணம்னா கலைஞருக்கு எதுவும் சலிக்கிறதுல்ல -சலிப்பு ஏற்படாததால கலைஞருக்கு மூப்பு கிடையாதுனு அடிச்சு விடலாம்.ஆனால் கலைஞரே எத்தனையோ முறை பலான பலானவர்களோடெல்லாம் அரசியல் செய்த எனக்கு இன்று யார் யாருடனோ அரசியல் செய்யவேண்டியிருக்குன்னு புலம்பியிருக்காரு .
கழகத்தின் கதையே இதுன்னா சுதந்திர போராட்டம் பத்தில்லாம் எடுத்துக்கிட்டா மேற்படி தலைவர்களோட ஆவிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும்.
இதை எல்லாம் மீறி எல்லாரும் வாழ்ந்துக்கிட்டு தானே இருக்காய்ங்க. ப்ரோக்ராம் பண்ணப்பட்ட ரோபோக்கள் மாதிரி .ஸ்மசான வைராக்கியம் -பிரசவ வைராக்கியம் எல்லாத்தையும் ஊதித்தள்ளி வாழ்க்கை எல்லாரையும் தள்ளிக்கிட்டே போகுதே .எதை நோக்கி ? மரணத்தை நோக்கியா?
இன்னம் 7 நாள் போனா நமக்கு 49 வயசு முடிஞ்சு அம்பதுல என்டர் ஆகிறம். "ஏ சரித்ர சூசினா ஏமுன்னதி கர்வ காரணம்"ங்கறாப்ல எல்லா இதயமும் ரணமாத்தான் கிடக்கு. அதை ஆளுக்கொரு குச்சி வச்சு குத்தி குடைஞ்சுக்கிட்டே தான் கிடக்கம்.
பீத்திக்கறான்யானு நீங்க சலிச்சுக்கிட்டாலும் செரி .சொல்ல வந்ததை சொல்லிர்ரன். சுய புத்தியில நம்ம ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பம் 1986.அங்கே இருந்து என்னென்னமோ அனுபவங்கள் . அந்த நேரத்துக்கு கச்சா முச்சானு தோனினாலும் ஒரு கட்டத்துல ராஜேஷ்குமார் நாவல் கணக்கா வெவ்வேறு எப்பிசோட்ல வந்த வெவ்வேறு கேரக்டர்ஸ் பச்சக்குனு சந்திச்சுக்கிட கதை நூல் பிடிச்சாப்ல போயிருக்கிறதை உணர முடிஞ்சது .
ஆன்மீகம்ங்கறதை லௌகீக வாழ்க்கைக்கு இன்சென்டிவ் /ப்ரமோஷன்/போனஸ் வாங்கற குறுக்கு வழியா நினைக்கிற சனம் தான் நூத்துக்கு 99 சதவீதம். இவிக வேண்டுதலைனு பார்த்தா அவற்றின் மூலம் அரசுகளின் மொள்ளமாரித்தனம் தான்.
அரசுகள் மட்டும் சீரான நிர்வாகத்தை வழங்கினா மேற்படி 99 சதவீதம் பேரும் ஒழுங்கா "பொளப்பை" பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. மிச்சம் மீதி உள்ள 1% பேரு சாதனையை (ஆன்மீக முயற்சிகள்) தொடர்வாங்க.
இது என்னடா கருமம் ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்டே அஞ்சு பத்து கை மாத்து கேட்டமாதிரி சனம் கடவுளை இன்சல்ட் பண்ணுதே .இதுக்கெல்லாம் ஒரு அல்ட்டிமேட் சொல்யூஷன் கிடைச்சா நல்லாருக்குமேனு ரோசிச்சதுல கிடைச்சதுதான் தேச கனவுகள்,மானில கனவுகள், "என் தேசம் என் கனவு" இத்யாதி எல்லாம்.
இன்னைக்கு ஜாய்ன்ட் பார்லிமென்டரி கூட்டம் கூட்டி ஒரு 30 நிமிட் நமக்கு பேச வாய்ப்பு கொடுத்து 31 ஆவது நிமிட் செத்துபோறதா இருந்தாலும் பீடையே போச்சுனு விட்டுரலாம்.
மேற்படி கனவுகள்ளாம் நனவாயிட்டா மட்டும் ஆன்மீகம் தழைச்சுருமான்னா நிச்சயமா இல்லை பிறவு ஏன் இந்த மெனக்கெடல்னா.. என்னத்த சொல்ல?
நானும் ப்ரோக்ராம் பண்ண ரோபோதானா? ஷிட் .. நெவர்..எல்லா சித்தாந்தங்களும் நாலு காலையும் தூக்கிட்டா நமக்கு கை கொடுக்கிற ஒரே சித்தாந்தம் "என்னமா பொழுது போச்சு"ங்கறதுதான்.
ஜஸ்ட் 2 மணி நேர சினிமா "இழுவை"யா இருந்தாலே எப்படி கடுப்பாகுது . இந்த மாதிரி வெட்டி சாகசங்கள்ளாம் இருந்தாதானே பாஸ் ..டெம்போ வரும்.
செரிப்பா ..நீ என்னதான் சொல்லவரேன்னு கேப்பிக. சொல்றேன். இங்கே எல்லாமே வெட்டி .அதுக்காவ வெட்டியா உட்கார்ந்திருந்தா போரடிக்கும். லைஃப்ல டெம்போ இருக்காது. எல்லாம் வெட்டின்னு தெரிஞ்சே வெட்டியா எதையாச்சும் செய்யனும்.
நீங்க செய்ற வேலை பொது நலத்துடன் கூடியதா இருந்தாலே கூட கர்மம் தொடரத்தான் செய்யும். பிறவி சக்கரத்துல ஃபிக்ஸ் பண்ணியே தீரும்.ஆனால் சீட் பெல்ட் இருக்காது .
ஆனால் உங்க வேலை சுய நலத்துடன் கூடியதா இருந்தா மட்டும் ஹெல்மெட்,சீட் பெல்ட் எல்லாம் கியாரண்டி .

No comments:
Post a Comment