'>

Saturday, March 30, 2013

திருச்சி ராமஜெயம் கொலை : ஆரூடம்


அண்ணே வணக்கம்ணே !
ரெம்ப நாளைக்கு மிந்தி கனிமொழி அக்கா தில்லிக்கு புறப்பட்டு போன நேரத்தை வச்சு ஆரூடம் போட்டு சில மேட்டர்லாம்  சொன்னேன்.அது கொஞ்சம் போல ஒர்க் அவுட் ஆனதா ஞா. அந்த தகிரியத்துல திருச்சி ராமஜெயம்  சாரோட ( முன்னாள் மந்திரி கே.என்.நேருவின் சகோ)  மரண நேரத்துக்கு ஒரு ஆரூடம் போட்டு பலன் சொல்லலாமேன்னு ஒரு எண்ணம் வந்தது. அந்த எண்ணம் செயலானதன் பலன் இந்த பதிவு.
போலீஸ் கார் !  போலீஸ் கார் ! கொலை வழக்கு என்னாச்சு போலீஸ் கார்னு கேட்டா ஒரு வருசம் ஆகியும் ஒன்னும் பேரலை. சாதாரணமா இந்த மாதிரி "அறாத" கேஸு மேட்டர்ல குறி -சோசியம்னு போலீஸ்காரவுகளே போறதும் உண்டு.
மேட்டருக்கு வரேன். கொலை நடந்த தேதி (29.03.2012)  நேரம்? அன்னாரின் கடியாரம் விடியல் 2.50 க்கு நின்னு போனதா சொல்றாய்ங்களே அந்த நேரத்தையே எடுத்துக்கிட்டன். எல்லா கெரகமும் ச்சொம்மா சிக்குன்னு ஒட்காருது .
அன்னைக்கு வளர்பிறை - ரோகிணி நட்சத்திரம் -கொலை நடந்த  நேரத்துக்கு 4 ஆம் பாதம் ஓடிக்கிட்டிருந்திருக்கு.ரோகிணிக்கு அதிபதி ஆரு? சந்திரன். சந்திரன்னா என்ன? மனசு -சஞ்சலம்- திடீர் பயணம். மேலும் 3/12 க்கு அதிபதியான குரு 4 ஆமிடத்துல  நின்னுருக்காரு. 3 ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம் .மாரகஸ்தானம்.  நாலுன்னா வீடு. வீட்ல இருக்கவேண்டிய ஜாதகரை அங்கே நின்ன 3/12 க்கு அதிபதியான குரு வெளிய தள்ளிக்கிட்டு வந்திருக்காரு. காரணம் என்ன?சந்திரன்னா ஜஸ்ட் சைக்கலாஜிக்கல். ஜஸ்ட் சைக்கலாஜிக்கல் சேட்டிஸ்ஃபேக்சன் தான்.
இந்த மேட்டருக்குள்ள டீப்பா போக விரும்பலை. ஜஸ்ட் மூன்லைட்ல ஒரு வாக் பண்ணலாம்னு போயிருக்கலாமே. இதுவும் சைக்கலாஜிக்கல் தானே.
எல்லாம் சரீ.. சந்திரனுக்குரிய நட்சத்திரத்துல ரத்தக்களறி ஏன் ஆச்சுன்னு கேப்பிக .சொல்றேன்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் - ஒரு நட்சத்திரம் 24 மணி நேரம் இருக்கும் . ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதம்னா ஒரு பாதத்துக்கு 6 மணி நேரம்.
சாதாரணமா கடைசி 6 மணி நேரத்துலயே அடுத்த நட்சத்திரத்தோட  எஃபெக்ட் ஆரம்பமாயிரும். அடுத்த நட்சத்திரம் என்ன?  மிருகசீர்ஷம்.இதுக்கு அதிபதி ஆரு.செவ்வாய்..  செவ்வாய்னாலே ரத்தக்களறி தானே.
இந்த செவ் ஆரூட லக்னத்துக்கு எட்டாமிடத்துல மரணத்தை காட்டற இடத்துல உட்கார்ந்திருக்காரே. அதனாலதேன் ர.க.
ஆரூட லக்னம் மகரம் -அதிபதி சனி பத்தாமிடத்துல உச்சத்துல  இருக்காரு. அதனாலதேன் காரியம் கச்சிதமா முடிஞ்சுருச்சு. சனியை கர்ம காரகன்னு சொல்வாய்ங்க. நீதிமன்றங்களுக்கு  குரு தான் காரகம்.ஆனால்  கொஞ்சமும் சைடு வாங்காம கண்ணுக்கு கண் ங்கற ரேஞ்சுல நீதி  வழங்கறதுல சனிக்கு நிகர் சனிதான். ஆக இது பழிக்கு பழியா நடந்த மேட்டருதான். இன்னம்கொஞ்சம் விலாவாரியா சொன்னா ஜாதகர் வழங்கிய நீதிக்கு பிரதிவினையா நடந்த  மேட்டருன்னும் சொல்லலாம்.
எந்த மேட்டருலன்னு கேட்டா சனி காரகம் கொண்ட விசயங்க. ஃபேக்டரி,சுரங்கம்,குவாரி எட்செட் ரா.  இது ஜாதகரோட இருப்பிடத்துக்கு மேற்கு திசையில இருக்கலாம்.
அடுத்து  3 ஆமிடத்துல சூரிய புத சேர்க்கைய பாருங்க . இவிக  6/9+8 பாவதிபதிகள் . 9ன்னா தெரியும் சொத்து,முதலீடுகள். ஆறுன்னா வேறென்ன விவகாரம் தேன். ஆரம்பத்துலயே தகராறோட ஜாதகர்  செய்த முதலீடு இந்த கொலைக்கு பின்னணியா இருக்கலாம்.
அடுத்து அஞ்சாமிடத்துல சந்திர ,சுக்கிர,கேது சேர்க்கை இருக்கு. அஞ்சுன்னா புத்தி ஸ்தானம் . சந்திரனை பத்தி ஏற்கெனவே நிறைய சொல்லியாச்சு. இதுல சுக்கிரன் வேற நிக்கிறாரே. பலர் பேசிக்கிட்டாப்ல (எழுதினாப்ல) கில்மா மேட்டர் எதுனா இருக்குமான்னா இருக்கலாம். ஆனால் அந்த பெண் பிறமதத்தை சேர்ந்தவராக -பூனைக்கண் கொண்டவரா இருக்கனும்.
இந்த கிரக சேர்க்கையை  7+5/10 +கேதுன்னு கூட பார்க்கலாம். 7ன்னா தெரியும். ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர் ,வைஃப்.  அஞ்சுங்கறது பூர்வ புண்ணியங்களை காட்டும் ,பத்துங்கறது செய்தொழில்,உத்யோகம் வியாபாரங்களை காட்டும். இந்த க்ரூப்ல கேது சேர்ந்தாரு. கேது மோட்சகாரகன்னு சொல்லனுமா என்ன?
இதை இப்படி அனலைஸ் பண்ணலாம். பார்ட்னர் ஷிப்புல (7) , விண்ட் ஃபால் கெய்ன்ஸுக்காக ( 5) செய்த தொழில்,வியாபார முயற்சி - சிக்கலா போச்சு ( கேது) அதனோட விளைவு தான் இது..
ராகு கேதுக்கள் 11-5 ல இருக்காய்ங்க. ராகு 11 ல இருந்தா பம்பர் லாட்டரி அடிக்கனும். அஞ்சுல கேது இருந்தா புத்தி குழம்பி போயி - தானா வலையில போயி சிக்கனும் அதுக்கு ஒரு சஞ்சலம் - மனரீதியான காரணம் இருக்கலாம்.
எல்லாம் சரீ.. தகராறு ஆரோட ? ஆரு செஞ்சாய்ங்க? இது மேட்டர்ல எதுனா க்ளூ கொடுக்கமுடியுமான்னு கேப்பிக. சொல்றேன்.
தகராறு ஆரோட:
ஆறுக்கதிபதி புதன். இதனால ஒரு வைசியர் அல்லது பெருமாள் பெயர் கொண்டவர் அல்லது தோல் வியாதி/விரை வாதம் /கீல் வாதம்  உடையவரோட தகராறு வந்திருக்கலாம். .இவரு பல காலம் ஜாதகரோட தொடர்புல இருந்து  அந்த தொடர்புகளால் ஜாதகர் பல சொத்துக்களையே உருவாக்கியிருப்பாரு. ஆனாலும் தகராறு வந்திருக்கலாம்.
 அதை  ஜாதகர் அந்த காலத்துல காட்டடி அடிச்சு முடிச்சிருக்கலாம். அது எப்படியாகொத்த காட்டடின்னா அண்ணாரே ஜாதகரை கடிஞ்சு பேசியிருக்கலாம். அல்லது தடுத்தும் இருக்கலாம்.அதையும்  மீறி போட்ட  காட்டடி.
இதை ஏன் இவ்ளோ அழுத்தி சொல்றேன்னா 3 ஆமிடத்துல உள்ள அஷ்டமாதிபதியான சூரியனை அஷ்டமத்துல உள்ள செவ் பார்க்கிறாரு.
ஆக்சுவலா 3ங்கறது சகோதர ஸ்தானம். அஷ்டமாதிபதின்னா மரணம் . அஷ்டமத்துல உள்ள செவ் சகோதர காரகன். இவரு சகோதர ஸ்தானத்தையே பார்க்கிறாரு.
ஒரு வேளை பாதிக்கப்பட்ட பார்ட்டி  செட்டில்மென்டுக்கு ஜாதகரோட சகோதரரை அணுகியிருக்கலாம். அதுல ஜாதகருக்கும் -சகோதரருக்கும் கொஞ்சம்  காச் மூச் எல்லாம் கூட நடந்திருக்கலாம்.
சகோதரர்  ரத்தத்தை விட்டுக்கொடுக்க முடியாம பம்மியிருக்கலாம்.  நடந்த இந்த காரியம் ஜாதகருக்கான தண்டனையா மட்டுமில்லை - ஜாதகரோட சகோதரருக்கு ஒரு கடும் எச்சரிக்கையா கூட நடத்தப்பட்டிருக்கலாம்.
( மூன்றாமிடம் கச்சா முச்சான்னு கிராஸ் ஆகுது பாருங்க)
இது பார்ட்னர்ஷிப் விவகாரம்ங்கறதுக்கு இன்னொரு அம்சமும் ஆரூட லக்னத்துல இருக்கு. பத்தாமிடத்துல உள்ள சனி பத்தாம் பார்வையா 7 ஐத்தான் பார்க்கிறாரு. பார்ட்னர்ஷிப்புக்கு 7 ஆமிடம் தான் என்பது அனுபவம்.
உடல் கிடந்த இடம்:
 திருச்சி கல்லணை ரோட்டில்  8வது கிலோ மீட்டரில் உள்ள திருவளர்சோலை என்ற இடத்தில் ராமஜெயம் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கு.
அணை என்பது தண்ணீர் சார்ந்த இடம். ஆரூட லக்னம் ஜல ராசி . எட்டாவது கிலோ மீட்டருன்னா எட்டுங்கறது சனிக்குரிய எண். திருவளர்சோலைங்கறது சுக்கிர சம்பந்த பட்ட பேரு.  சுக்கிரன்னாலே பெண் .
//இரண்டு கைகளையும்  கால்களையும் கம்பியால் கட்டி / /
( கால புருச தத்துவத்தின் படி இது மூன்றாமிடம் - மூன்றாமிடத்துல அஷ்டமாதிபதி இருந்ததால -அஷ்டமத்துல உள்ள செவ் பார்த்ததால பந்தனம் )
கம்பின்னா சனி காரகம். ஆரூட லக்னத்துக்கு அதிபதி சனி.
எண் கணிதம்:
தேதி 29 . இது சந்திர காரகம் . தேதியின் எல்லா எண்களையும் கூட்டினால் (29-3-2012) 19 வருது . 1 என்றால் சூரியன் - 9 என்றால் செவ். சூரியன் ஆரூட லக்னத்துக்கு அஷ்டமாதிபதி . செவ் அஷ்டமத்துலருந்து அஷ்டமாதிபதியை பார்க்கிறார்.
ஆரு செய்திருப்பாய்ங்க?
எங்க வச்சு செய்திருப்பாய்ங்க?
எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லலாம். ஆனால் பப்ளிக் ப்ளாக்ல இந்தளவுக்கு எழுதறதே ரிஸ்கு. ஒரு வகையில உரியவர்களின் ப்ரைவசியை பாதிக்கிற மேட்டரு. ஏதோ அவிக பப்ளிக் லைஃப்ல இருக்கிறதால இது மாதிரி மேட்டரையெல்லாம் சகிச்சுப்பாய்ங்கங்கற நம்பிக்கையில எழுதியாறது.
எப்பத்தேன் கண்டுபிடிப்பாய்ங்க?
 15/Nov/2012  => முதல் 03/Dec/2013  வரையிலான காலகட்டத்தை ரெண்டு பாகமா பிரிச்சுக்கோங்க. மொதல் பகுதி முடிஞ்ச  பிறகு 03/Dec/2013 க்குள்ள கண்டுபிடிப்பாய்ங்க. உண்மையான கொலையாளிகளை சொன்னேங்க. அடுத்து.. ஸ் .. போதும்டா சாமீ ..
ஆள விடுங்கப்பு.. உடுங்க ஜூட்டு .குருவை அடுத்த பதிவுல சந்திப்போம்.

No comments: