'>

Monday, July 9, 2012

என் கனவு தேசம்: 1

அண்ணே வணக்கம்ணே ! நமக்குள்ள நம்ம நாடு எப்படி இருக்கனுங்கற மேட்டர்ல கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர இப்படி மட்டும் இருக்கக்கூடாதுங்கற விஷயத்துல கருத்து வேறுபாடே இல்லை.சின்ன வயசுல நான் பிரதமரானால்னுட்டு ஒரு தலைப்பை கொடுத்து பத்து வரி எளுதச்சொல்வாய்ங்கன்னு தான் இந்த பதிவை ஆரம்பிக்க இருந்தேன் ஆனால் சனம் ஏற்கெனவே இந்த தலைப்பை பிரிச்சு மேஞ்சுட்டாய்ங்க போல. சிலதை ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணியிருக்கேன் பாருங்க.

சுஜாதா சொல்வாரு பசங்க ஏதோ ஒரு கணத்துல தங்கள் அறியாமையை இழந்துர்ராய்ங்க. வாழ்க்கையின் குரூரத்தை தரிச்சுர்ராய்ங்க.பெரியவுகளாயிர்ராய்ங்கன்னு.

நம்மை பொருத்தவரை வாழ்க்கையின் குரூரத்தை என்னதான் டைட் க்ளோசப்ல பார்த்திருந்தாலும் இன்னமும் அந்த "அறியாமை" ஒழியலை. பெரியவனா ஆகவே இல்லை. விடலைக்கனவுகள் இன்னமும் இருக்கு. ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த விடலைத்தன்மை ரெம்ப முக்கியம். இல்லின்னா அவன் தன் படைப்புத்தன்மைய இழந்துருவான்.

ஒரு ரேஷன் கடை க்யூவை கற்பனை பண்ணுங்க. ராமசாமி முனிசாமிய நெருக்கி தள்ளுவான். ஏன்னா ராமசாமியை இன்னொரு சாமி நெருக்கி தள்ளிக்கிட்டிருப்பான். இப்படி க்யூல உள்ள ஒவ்வொருத்தரும் எவரோ முட்டித்தள்ள முன்னாடி உள்ளவுகளை முட்டித்தள்ளுவாய்ங்க.

ஆனால் ரேஷன் கடை டீலர் மட்டும் பில்லு போடாம சின்ன வீட்டோட ஃபோன் பேசிக்கிட்டிருப்பான். சரக்கு போடறவன் சுவாரஸ்யமா கம்கட்ல சொறிஞ்சிக்கிட்டிருப்பான்.

இதே நிலை தான் நம்ம நாட்டு நிர்வாகத்துலயும் நடந்துக்கிட்டிருக்கு. அரசாங்கம்னா அது எங்கயோ தங்க நாற்கர சாலையில போற சமாசாரம் இல்லை. உங்க பெட்ரூம் ,ஏன் கக்கூஸுல கூட வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ண கூடிய மேட்டரு.

உதாரணத்துக்கு நம்ம நிலைய பாருங்க. இந்த விலைமகள் மகன்கள் கொடுத்த படிப்பு (பிகாம்) புவ்வாவுக்கு வழி செய்யலை. நாமளா ஒரு ஆர்வத்துல இறங்கின சோசியம் சோறு போடுது. நம்ம வேலைய நாம ஒளுங்கா செய்யனும்னா கம்ப்யூட்டர் வேலை செய்யனும். அதுக்கு பவர் வேணம்.

ஆனால் நிலைமை என்ன? காலையில 8.30 டு 10.30 பவர் கட், மதியம் 12.30 டு 2.30 பவர் கட். இந்த மாரி பிட்டு பிட்டா வேலை பார்த்தா அது "பலான வீட்டுக்கு போயி ஹவர் கணக்குல இருந்தாப்ல" இருக்கே தவிர திருப்தியாவே இல்லை.

இதனால என்ன பண்றோம் பகல் எல்லாம் ச்சொம்மா கதை பண்ணிட்டு ராத்திரியில கோதாவுல இறங்கிர்ரம். இயற்கை தூங்கப்போகும்போது விழிச்சிருக்கம். காலை 10.30 வரை தூங்கறோம். ரத்தம் கொதிக்குது. பாடியோட பயோ கெமிஸ்ட்ரியே மாறிப்போகுது -அஜீரணம் -வாயு கோளாறு -அசிடிட்டி-கான்சிட்டிபேஷன் -மூளை தன்னோட செயல் திறனை படிப்படியா குறைச்சுக்கிட்டே வருது.

பகல் 10.30 வரை தூங்கி தொலைச்சாலும் பரவால்லை. நமக்கு சந்திராஷ்டமம் அது இதுன்னு இருந்து மறுபடி அதிகாலையில முழிப்பு வந்து -வேலையும் பார்த்துட்டம்னு வைங்க. வெயில் ஏற ஏற ஒரு விதமான உதறல் -டென்ஸ் -கண் எரிச்சல் ஆரம்பமாகும். அந்த சமயம் பார்த்து எவனாச்சும் மணி கேட்டா கூட கெட்ட கெட்ட வார்த்தையா வரும்.

புதுசா கண்ணாலமானவுகளா இருந்தா புருசன் பொஞ்சாதிக்கு முட்டிக்கிட்டு மஹிளா ஸ்டேஷன் வரை கூட கேஸு போயிரும். அவள் கோவிச்சுக்கிட்டு அம்மா ஊட்டுக்கு போக- இவன் கூட வேலை பார்க்கிறவளோட பப்புக்கு போயி மப்பாக அவள் கொஞ்சம் சேப்பா இருக்க -சேஃபா வீட்டுக்கு கூட்டி வந்து கெட்டகாரியம் பண்ணிட்டான்னா அது வேற தனி ட்ராக் ஆரம்பமாயிரும்.

இத்தனைக்கும் காரணம் ஆரு கெவுர்மென்டு. நாம ஒரே பொருளை -ஒரே நேரத்த்ல ஒருத்தங்கிட்டருந்து ரெண்டு ரூபாய்க்கும் -இன்னொருத்தன் கிட்டருந்து 12 ரூவாய்க்கும் வாங்குவமா? ஊஹூம்..ஆனா கெவுர்மென்டு வாங்குது.

ஏன்? மந்திரிக்கு சில்லறை புரளுது. அவர் ஏன் புரட்டறாரு? கட்சி டிக்கெட்டுக்கு செலவழிச்சாரு தேர்தல்ல செலவழிச்சாரு, போட்டதை எடுக்கவேணாமா?

இந்த செயின்ல ஒன்னு ரெண்டு அதிகாரி ஹானஸ்டா இருக்கலாம்.ஆனால் அந்த மன்சனும் ஒத்து ஊதித்தான் ஆகனும். இல்லின்னா அந்தாளு பொளப்பு நாறிரும். தண்ணியில்லாத காடோ? முவத்துல ஆசிட் அடிக்கிறதோ நடக்கலாம்.

சனம் பணம் பணம்னு அலையுது.ஏன் பணமிருந்தா எதை வேணம்னா வாங்கிரலாம். ஜஸ்ட் பணம் மட்டும் இருந்தா போதும்.. காதலியை -சி.எம் ட்ராவல் பண்ற ஹெலிகாப்டர்லயே கூட்டிக்கிட்டு சிட்டி மேல ஒரு ரவுண்டு வரலாம் ( இது நெஜமாலுமே நடந்துதுங்கோ -சி.எம் கிரண்)

நான் என்ன சொல்றேன்னா நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அமலாக்கிட்டு - எக்கானமி பாக்கேஜை இம்ப்லிமென்ட் பண்ணிட்டு நாதார் கார்டுக்கு .. அடச்சே ஆதார் கார்டுக்கு விவரம் சேகரிச்சாப்ல ஒரு டேட்டா பேஸை உருவாக்கனும்.

ஒரு மன்சன் (குடிமகன்) என்ன வேலை பார்க்கிறான்? ஃப்ரீ ஹவர்ஸ்ல என்ன பண்றான். இந்த சமுதாயத்துக்கு/ நாட்டுக்கு அவனால அவன் செய்ற வேலையால என்ன லாபம் , அவனோட தேவைகள் என்னன்னு ஆக்யுரேட்டா கால்குலேட் பண்ணி டெபிட் கார்டு மாதிரி ஒன்னை கொடுத்துரனும். அவன் எதுக்கு செலவழிச்சாலும் இதுலருந்து தான் செலவழிக்கனும்.கரன்சிங்கறதை கண்ல காட்டக்கூடாது.

ஊழலுக்கு ஊற்றுக்கண்ணே தேர்தல்தான். இதை தாளி 1 மாசத்துக்கு நடத்தனும். 100 % போலிங் நடந்தா தவிர ரிசல்ட்டே அனவுன்ஸ் பண்ணக்கூடாது. புல்லட் ப்ரூஃப் க்ளாஸோட எஸ்.டி.டி பூத் மாதிரி வச்சுரனும். கட்டைவிரல் ரேகை தான் அடையாள அட்டை .

அதே போல கட்சிங்களோட சமாசாரம் உட் கட்சி தேர்தல் கட்டாயம் - ஒவ்வொரு உறுப்பினனும் ஒரு தகுதி தேர்வுல பாஸ் ஆகனும். கம்ப்யூட்டரைஸ் செய்யப்பட்ட ஆடியோ கேள்விகளுக்கு பதில். கம்ப்யூட்டர் பாஸா ஃபெயிலா சொல்லி ஒரு காயிதத்தை துப்பிரனும்.

கட்சிகள் நன் கொடை வசூலிக்கவும் - தொழில்களில் முதலீடு செய்யவும் வழி செய்யனும். தேர்தல் செலவுக்கான தொகையை பத்து மடங்காக்கனும். அவிக கட்சிக்கு வந்த ஓட்டு சதவீதத்தை பொருத்து அவிக செலவழிச்ச காசை திருப்பித்தரனும்.

சரிங்ணா இன்னைக்கு இது போதும்.பவர் கட் நேரம் வேற நெருங்குது. சீ யு..

No comments: