'>

Thursday, May 24, 2012

ஆந்திரத்தில் கலவரசூழல் 144


அண்ணே வணக்கம்ணே !

ஆந்திர முன்னாள் முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜகன் இன்னம் கொஞ்ச நேரத்துல சி.பி.ஐ மின்ன ஆஜராவ போறாரு. விசாரணைக்கு வர்ர ஜகனை அப்படியே புடிச்சு போட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு க்ரூப் ஆஃப் மீடியா கூவிக்கிட்டிருக்கு. ஹைதராபாத்ல மட்டுமில்லாம , எல்லா மாவட்ட மையங்கள்ளயும் ஹை அலர்ட் அறிவிச்சிருக்காய்ங்க.

ஆந்திராவுல இருந்துக்கிட்டு ஆந்திர அரசியலை டச் பண்ண மாட்டேங்கிறியே நைனான்னுட்டு பலர் பேஜார் படறாய்ங்க. அவிகளை திருப்தி படுத்தவாச்சும் இன்னைக்கு ஒரு பதிவு போட்டே ஆகவேண்டிய நிலை. சோதிட பிரியர்கள் மன்னிக்கனும். ஆனால் இதுலயும் சோசியம் வருதுங்கோ..

மொதல்ல ஜகன் மோகன் ரெட்டி ( சொத்துக்குவிப்பு வழக்காம்) மே 28 ஆம் தேதி நேர்ல ஆஜராகனும்னு சி.பி.ஐ கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது.

சி.பி.ஐக்கு சஸ்பென்ஸ் தாங்கலியோ என்னமோ மே 25 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகனும்னு நோட்டீஸ் அனுப்பிட்டாய்ங்க. அதுவும் எப்படி இடைத்தேர்தல் பிரச்சாரத்துல இருந்த ஜகன் கையிலயே கொடுத்திருக்காய்ங்க.

இன்னைக்கு தேன் மே 25. ஜகனை தூக்கி உள்ளே வைக்கனும். அப்பத்தேன் நடக்கப்போற இடைத்தேர்தல்ல சிங்கிள் டிஜிட்லயாச்சும் காங்கிரஸுக்கு டிப்பாசிட் நிலைக்கும்ங்கற நிலைமை . இதுக்காவ நேத்து தங்கள் மந்திரி ஒருத்தரையே தூக்கிட்டாய்ங்க. (அரெஸ்ட் பண்ணிட்டாய்ங்க).

இதுல எல்லா மந்திரியும் பேதியாகி கிடக்கிறாய்ங்க. ஃபோன் அடிச்சாலே சி.பி.ஐயான்னுட்டு பி.பி எகிறுதாம்.

பாருப்பா எங்களுக்கு நீதி, நியாயம் , நேர்மை தான் முக்கியம் ஆரு தப்பு பண்ணாலும் தூக்கிருவம்னு ஃபிலிம் காட்டறது காங்கிரசோட நோக்கம் (இடைத்தேர்தல்ல ஜகனுக்கு அனுதாப அலை கை கொடுத்துரக்கூடாதுன்னு அலார்ட்டா இருக்காய்ங்க)

இந்த வழக்கு எப்படி வந்தது .. என்ன வழக்குன்னு தெரிஞ்சா ரெம்ப தமாசா இருக்கும் சங்கர்ராவ்னு ஒரு மந்திரி. இவர் பாவம் கோர்ட்டு கேஸுன்னு போகவோ - லாயருக்கு ஃபீசு கொடுக்கவோ துப்பில்லாத அன்னாடங்காய்ச்சி( ?) .

ஒய்.எஸ்.ஆர் தனியாருக்கு நிலம் ஒதுக்கி 20 அரசு ஆணைகள் வெளியிட்டதாகவும் - அதனால் பலன் பெற்ற நிறுவனங்கள் ஜகனோட கம்பெனிகள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்ததாவும் அதையெல்லாம் லஞ்சப்பணமா கருதி நடவடிக்கை எடுக்கனும்னு ஹை கோர்ட்டுக்கு ஒரு லெட்டர் போட்டார்.

உடனே ஹை கோர்ட் அந்த கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று குறைஞ்ச பட்ச ஆதாரங்கள் இருக்கான்னு பார்க்க சொல்லி சிபிஐக்கு உத்தரவு போட்டது.

சி.பி.ஐ கு.ப ஆதாரங்கள் இருப்பதா அறிக்கை கொடுத்தது. டீட்டெய்ல்ட் என்கொய்ரி நடத்தும்படி ஹைகோர்ட் உத்தரவிட்டது. விசாரணை நடந்துக்கிட்டே இருக்கு. சுஜாதாவோட தொடர்கதை கணக்கா சார்ஜ் ஷீட்டுகளை தாக்கல் பண்ணிக்கிட்டே இருக்காய்ங்க.

மேற்படி சங்கர்ராவோட பவிசு என்னனு தெரிஞ்சுக்கனும். ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மன்சனை கடிச்ச கதையா சொந்த கட்சி மந்திரிகள் மேலயே புகார் சொல்லி மறுபடி ஹைகோர்ட்டுக்கு ஒரு லெட்டர் தட்டிவிட்டார். சங்கர் ராவ் ஆயி பையன் அவர் பேச்சை நம்ப முடியாதுன்னு கோர்ட்டு அதை தள்ளுபடி பண்ணிருச்சு.

இந்த கடுப்புல காங்கிரஸ் சட்டமன்ற கட்சி அலுவலகத்துலயே ப்ரஸ் மீட் நடத்தி சி.எம் உட்பட பல மந்திரிகளை கழுவி கழுவி ஊத்திக்கினு கடந்தாரா.. மந்திரி பதவியையும் புடுங்கிட்டாய்ங்க. மேற்படி ஆஃபீஸ்க்குள்ள நோ அட்மிஷன்னு போர்டு போட்டுட்டாய்ங்க. இந்த பெரீ மன்சன் போட்ட கடிதாசுதான் இந்த வழக்குக்கு அடிப்படை.

இந்த வழக்குல ஜகன் தான் முதல் எதிரி. ஆனால் 7 மாசமா நாளிதுவரை அவரை விசாரணைக்கும் கூப்டாம சம்மன் கொடுக்காம சீன் போட்டுக்கிட்டிருந்தாய்ங்க. இப்போ இடைத்தேர்தல்ல ஜகன் ஆட்களை பேதியாக்க ஜகனோட சாட்சி மீடியா நிறுவனத்தோட வங்கி கணக்குகளை முடக்கறதும் -அரசு விளம்பரங்களை நிறுத்தரதுமா டோசேஜ் அதிகரிச்சுக்கிட்டிருந்தாய்ங்க.இதுல மேற்படி ரெண்டு மேட்டர்லயும் கோர்ட்ல ரெமிடி கிடைச்சுருச்சு.

இந்த வரிசையிலதான் இன்னைக்கு சிபிஐ முன்னாடி ஆஜராக சொல்லி நோட்டீஸ். இந்த வழக்கின் ஆணி வேர் தனியாருக்கு நிலம் ஒதுக்கிய அரசு ஆணைகள். அதுக்கு டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஒருத்தரை மட்டும் பொறுப்பாக்க கூடாது அந்த சமயம் மந்திரிகளா இருந்தவுகளை , ஐ.ஏ.எஸ்களையும் விசாரிக்கனும்னு ஒரு பார்ட்டி ரிட் போட கோர்ட் அவிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி விஜாரிக்க சொல்லி உத்தரவிட்டாச்சு.

சிபி ஐ காரவுக மந்திரிகளுக்கு ஃபோன் போட்டு "அப்பாய்ன்ட்மென்ட்"கேட்டுக்கிட்டிருக்காய்ங்களாம். ஒரே ஒரு பெண் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் கைதுபண்ணியிருக்காய்ங்க. ஆனால் ஜகன் மேட்டர்ல மட்டும் படு ஸ்பீட். ஊழல் நடந்தது நெஜம்தான்னா மொதல்ல அரசாங்கம் என்ன செய்யனும்? மேற்படி 20 அரசு ஆணைகளையும் ரத்து பண்ணனும். ஒதுக்கின நிலங்களை கையகப்படுத்திக்கனும். அன்னைக்கு மந்திரிகளா இருந்தவுகளை கூண்டோட ராஜினாமா பண்ணச்சொல்லனும். அன்னைக்கு இருந்த அதிகாரிகளை சஸ்பெண்ட் பண்ணனும். விசாரணை கமிஷன் போடனும். அதெல்லாம் பண்ண மாட்டோம் ஜகன் கோவணத்தை மட்டும் உருவி வாசம் பார்ப்போம்னா ஜனங்க மத்தியில சிம்பதிதான் வ்ரும்.வந்துக்கிட்டிருக்கு.

ஒரு வேளை கோர்ட்ல ஆஜராக போற ஜகனை அரெஸ்ட் பண்ணா இந்த சிம்பதி இன்னம் சாஸ்தியாகுமே தவிர குறையாது. மேலும் இந்த ராயல சீமா அதுலயும் கடப்பா மாவட்ட புள்ளைக படு கோவக்கார புள்ளைங்க.

ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதின்னு எல்லா பயபுள்ளைகளும் ஒன்னா சேர்ந்துருவாய்ங்க. காங்கிரஸ்ல கன்டின்யூ பண்ணி ஒய்.எஸ்.மனைவியையே எதிர்த்து போட்டியிட்ட ஜகனோட சித்தப்பு விவேகானந்த ரெட்டி நேத்து ஜாய்ன் பண்ணிக்கினாரு. இன்னைக்கு தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி ( கடப்பால தெ.தேசத்துக்கு கேர் ஆஃப் அட் ரசே இவருதேன்) மைசூரா ரெட்டி ஜாய்ன் பண்ணிக்கினாரு.

மேலும் ஜகன் கைது விஷயம் நடந்தா என்ன நடக்கும்னு சொல்லமுடியாது. நேத்து ஒரு ஆளுங்கட்சி மந்திரி -காங்கிரஸ் மந்திரி அரெஸ்ட் ஆனதுக்கே அவிக தொகுதியில ஏக களேபரம். ஜகன் ஸ்டேட் ஃபிகர். நேட்டிவ் ஆஃப் கடப்பா..

ஜூன் 17 க்குள்ற இன்னம் என்னெல்லாம் நடக்கப்போகுதோ ? அதுக்கப்பாறம் மட்டும் ஜகன் கட்சி 18+1 பார்லிமென்ட் தொகுதிகள்ள ஒன்னு ரெண்டு தவறினாலும் மத்ததுலல்லாம் அடிச்சு தூள் பண்ணி காங்கிரஸை துவைச்சு காயப்போட போறது கியாரண்டி. காங்கிரஸ் கூடாரம் காலியாகப்போறது கியாரண்டி. இந்தவருசமே தேர்தல்.ஜகன் சி.எம்.எளுதி வச்சுக்கங்க.

No comments: